2005ஆம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட வெள்ளம்
ஜூலை 27, 2005 அன்று நடந்த பயங்கரமான மும்பை வெள்ளம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
நான் மும்பையில் வளர்ந்தவன், அந்த நாள் என் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளது. அன்று நான் வேலையிலிருந்து வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்தேன். எனக்கு சுற்றி தண்ணீரின் மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது, நான் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உதவிக்கு ஆளை இல்லாமலும், நான் தப்பித்து வர முடியுமோ என்ற அச்சத்தோடும் முற்றிலும் சிக்கித் தவித்தேன்.
நான் தண்ணீருடன் எதிர்கொண்ட மிகவும் பயங்கரமான அனுபவம் அதுதான்.
அந்த அனுபவம், ஓரளவிற்கு, பவுலும் அவருடன் பயணித்த 275 பயணிகளும் ஒரு பயங்கரமான புயலில் சிக்கியபோது என்ன உணர்ந்திருப்பார்கள் என்பதை உணர எனக்கு உதவுகிறது. என் வேதனை சில மணி நேரம் மட்டுமே நீடித்தது, ஆனால் அவர்கள் ஒரு புயலில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக😱 (அப்போஸ்தலர் 27ஆம் அதிகாரத்தில் உள்ள கதையைப் படியுங்கள்) மூழ்கும் கப்பலில் கடலில் சிக்கித் தவித்தனர்.
பவுல் அந்த உணர்வை இவ்வாறு விவரிக்கிறார்:
“அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.” – அப்போஸ்தலர் 27:20
கப்பலின் எடையைக் குறைப்பதற்காக அவர்களுடைய தானியங்கள் அனைத்தையும் கடலில் எறிவதற்கு முன், பவுல் எல்லாரையும் சாப்பிட வற்புறுத்தினார், ஏனென்றால் அதுவே அவர்களுடைய கடைசி உணவாக இருந்திருக்க வாய்ப்பு இருந்தது.
"இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான். அப்பொழுது எல்லாரும் திடமனப்படுத்துப் புசித்தார்கள்." – அப்போஸ்தலர் 27:35-36
புயலின் நடுவில் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த பவுல் தேர்வு செய்தார். அவர்களுக்கு ஆண்டவரின் பாதுகாப்பும் உதவியும் தேவையான நிலைமையிலும் அவர் அவற்றைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் ஆண்டவர் ஏற்கனவே வழங்கியதன் மீது: அதாவது, அவர்கள் முன் இருந்த உணவின் மீது கவனம் செலுத்தி ஆண்டவரை ஸ்தோத்தரித்தார்.
மறுநாள், ஆண்டவர் பவுலுக்கு வாக்களித்திருந்தபடியே, கப்பலில் இருந்த 276 பேரும் பாதுகாப்பாகக் கரைசேர்ந்தனர்.
புயல் கடந்துபோன பிறகு நன்றி சொல்லாமல், அதன் மத்தியிலேயே பவுல் நன்றித் சொல்லினார் என்றால், நாமும் நம் புயல்களின் மத்தியில் நன்றி சொல்லலாம்.
உங்கள் வாழ்க்கையின் புயல்கள் என்ன? மேலும் நீங்கள் நன்றியுடன் இருக்க உங்கள் முன் இருக்கும் விஷயங்கள் என்ன?