என் நண்பர்களின் சிறிய உதவியுடன் நான் சமாளிப்பேன்
“எனது நண்பர்களின் சிறிய உதவியுடன் நான் சமாளிப்பேன்,” என்று ஒரு பிரபல ஆங்கில இசைக் குழுவினர் (beatles) பாடியபோது, அவர்கள் அதன் மூலம் ஏதோ ஒரு உண்மையைத் தெரிவிக்க முற்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
நமது சமூகம் மெதுவாக அதிக தனிநபர் சார்ந்ததாக மாறி வருகிறது. நண்பர்களிடம் உதவி கேட்பது கூட ஒரு தடையாகத் தோன்றுகிறது. நாம் தன்னிறைவுடன் இருக்க ஊக்குவிக்கப்படுகிறோம்; மற்றவர்களின் உதவி எவ்வளவு குறைவாகத் தேவையோ, அவ்வளவு அதிக வெற்றி பெற்றவர்களாக நாம் கருதப்படுகிறோம்.
ஆனால் இது ஒரு வேதாகம கொள்கை அல்ல. மற்றவர்களைச் சார்ந்து இருக்கவும் ஒருவருக்கொருவர் உதவவும் வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது.
"ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே." - பிரசங்கி 4:9-10
தனக்கு உதவி தேவை என்பதை நன்கு அறிந்திருந்த ஒருவர் மோசே. அவர் வேதாகமத்தில் உள்ள மிகச்சிறந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார், ஆனாலும், எல்லாவற்றையும் தனியாக நின்று செய்ய முடியாது என்பதை அவர், சில சமயங்களில் கடினமான வழியில், கற்றுக்கொண்டார்.
சமாளிக்க முடியாத பல சூழ்நிலைகளை அவர் எதிர்கொண்டார்.
இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து வழிநடத்தி வெளியே கொண்டுவர மோசேக்கு தேவன் அழைப்பு விடுத்தபோது, தன்னால் அது இயலாத ஒன்று என்று மோசே வாதிட்டார். இஸ்ரவேலர் தனக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள் என்று அவர் சந்தேகித்தார், தனது பேச்சு குறைபாடு தன்னைத் தகுதியற்றதாக்குகிறது என்று வாதிட்டார், இறுதியாகத் தேவனிடம் மன்றாடினார்: "ஆண்டவரே. நீங்கள் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாராகிலும் அனுப்பும் என்றான்." (யாத்திராகமம் 4:13).
தேவன் அவருடைய சகோதரனாகிய ஆரோனை அவருடன் அனுப்பினார். ஆரோனின் உதவியுடன், மோசேயால் இஸ்ரவேலரையும், பின்னர் பார்வோனையும் எதிர்கொள்ள தைரியம் கிடைத்தது (யாத்திராகமம் 4).
மோசே வனாந்திரப் பயணத்தின்போது மீண்டும் தனது பெலத்திற்கு அப்பால் சோதிக்கப்பட்டார். மக்கள் தொடர்ந்து குறை கூறிக் கொண்டே இருந்தனர், தண்ணீர், தலைமை, உணவு விருப்பங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி குறை கூறினர். மோசே தேவனிடம் புலம்பினார்: "இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது." (எண்ணாகமம் 11:14).
இதற்க்கு தேவனுடைய தீர்வு என்னவாக இருந்தது?
"அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக்கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படிசெய் […] உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்குகிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்." - எண்ணாகமம் 11:16-17.
மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற நாம் கற்றுக்கொள்ளும்படி, சமாளிக்க மிகவும் கடினமான சூழ்நிலைகளை தேவன் அனுமதிக்கலாம்.
உங்கள் வாழ்க்கைச் சுமை தாங்க முடியாத அளவுக்கு இருப்பதாக உணர்கிறீர்களா? இதில் நீங்கள் தனியாக இல்லை. பயிற்சி பெற்ற எங்களுடைய ஆன்லைன் பயிற்றுநர்கள் (e-coaches) கொண்ட குழு உங்களுக்காக இங்கே உள்ளது! செவிகொடுத்துக் கேட்கவும் (வேதாகமம் சார்ந்த) உற்சாகமளிக்கவும் அவர்கள் உங்களுக்குத் துணையாக வரத் தயாராக உள்ளனர். இன்று உங்கள் மின்-பயிற்சியாளரைக் (e-coach) கண்டறிய இந்த மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கவும்.