திரும்பிப் பார்ப்பதால் என்ன பயன்?
வருடத்தை சரியாக முடிப்பதற்கான 7 சிந்தனைகளில் இன்று நாம் ஆறாவது நாளில் இருக்கிறோம், இன்று நீங்கள் உங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: “இந்த வருடத்தின் எந்த இடத்தில் நான் திரும்பிப் பார்த்து, 'நான் இதை வேறு மாதிரி செய்திருக்கலாமே' என்று விரும்புகிறேன்?”
என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், இது தவறுகளைப் பற்றி சிந்தித்து குற்ற உணர்ச்சியில் உழலுவதற்கான நேரம் அல்ல. அப்படியானால், நாம் வேறுவிதமாகச் செய்திருக்க விரும்பும் காரியங்களை ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? ஏனென்றால், இந்த வருடத்தின் மிகவும் சவாலான தருணங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாகும்.
உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது உங்களை அறிவுள்ளவராகவும், பலசாலியாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானவராகவும் மாற்றுகிறது.
"நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்." – நீதிமொழிகள் 24:16
மறுபுறம், உங்கள் தவறுகளை மூடிமறைப்பது அவற்றை மீண்டும் மீண்டும் செய்ய வழிவகுக்கும்.
இந்தக் கேள்வியை நீங்கள் சிந்திக்கும்போது, அந்தச் சூழ்நிலையைப் பற்றிச் செய்ய வேண்டியது ஏதாவது மீதம் இருக்கிறதா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் காயப்படுத்திய ஒருவரிடம் சுமூகமாக பேச வேண்டுமா? ஒருவேளை மன்னிப்பைக் கேட்க வேண்டுமா? அறிக்கையிட வேண்டிய பாவங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." – நீதிமொழிகள் 28:13
உங்கள் தவறுகளைச் சரிசெய்வது அதிக வளர்ச்சிக்கும், குறைந்த குற்ற உணர்ச்சிக்கும், இறுதியில் அதிக சமாதானத்திற்கும் வழிவகுக்கும்.
“நீங்கள் மனதிரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்” – ஏசாயா 30:15
நாமெல்லோரும் வேறுவிதமாகச் செய்திருக்க விரும்பும் காரியங்கள் உள்ளன, ஆனால் மிகவும் அழகான விஷயம் என்னவென்றால், தேவன், தமது முடிவில்லாத இரக்கத்தினால், அதை நம்மீது குற்றமாக பார்ப்பதில்லை. மாறாக, அந்தச் சந்தர்ப்பங்களை நாம் வளரவும் கற்றுக்கொள்ளவும் அவர் அனுமதிக்கிறார்.