2025ஆம் ஆண்டில் உங்களின் சிறந்த தருணம் எது?
இந்த வாரம், கடந்துபோகும் ஆண்டைப் பற்றிச் சிந்தித்தவாறு, நாம் நமக்குள் நிறைய முக்கியமான, ஆழ்ந்த கேள்விகளைக் கேட்டுக்கொண்டோம்.
இன்று, ஒரு கலகலப்பான சிந்தனையுடன் இதை முடிப்போம். உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: இந்த ஆண்டு நான் எப்போது அதிகமாகச் சிரித்தேன்?
சில சமயங்களில் கிறிஸ்தவ வாழ்க்கை நகைப்பின்றி மிகவும் தீவிரமாக தோன்றலாம்; எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் ஒரு பரிசுத்த தேவனைச் சேவிக்கிறோம், மேலும் நாம் செய்வதெல்லாவற்றிலும் இயேசுவைப் போல மாற விரும்புகிறோம். நாம் ஜெபிக்கிறோம், தியானிக்கிறோம், வேதாகமத்தைப் படிக்கிறோம் மற்றும் தேவனுக்குச் சேவை செய்வதில் நேரத்தைச் செலவிடுகிறோம். இருப்பினும், தேவனோடுள்ள ஒரு வாழ்க்கை மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிரம்பிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
சந்தோஷம், களிகூறுதல், மற்றும் சிரிப்பு ஆகியவை வேதாகமத்தில் திரும்பத் திரும்ப வரும் கருப்பொருள்களாகும், மேலும் வேதாகமம் நம்மைத் திரும்பத் திரும்ப மகிழ்ச்சியடைய ஊக்குவிக்கிறது:
"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்." – பிலிப்பியர் 4:4
"எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." – 1 தெசலோனிக்கேயர் 5:16-18
"நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." – ரோமர் 12:12
சில மகிழ்ச்சியான நினைவுகளைப் பற்றிச் சிந்திக்கவும், நீங்கள் புன்னகைத்த நேரங்களைப் பற்றி யோசிக்கவும் ஒரு கணம் ஒதுக்குங்கள்! உங்களைச் சிரிக்க வைத்தவற்றின் சில நினைகளுக்காக உங்கள் புகைப்படப் பட்டியலைக் (phone camera roll) கூட நீங்கள் பார்க்கலாம்.
அந்தத் தருணங்களை நினைத்து சந்தோஷப்படுங்கள். அவற்றை ஜெபத்தில் இயேசுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்தத் தருணங்களில் அவர் கூட சிரித்துக் கொண்டிருந்தார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்! நன்றியோடு முடியுங்கள் – இத்தகைய விலைமதிப்பற்ற மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளால் உங்களை ஆசீர்வதித்ததற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்.