“காற்றைப் பெற்றெடுங்கள்!”.... நில்லுங்கள்! அப்படியென்றால்?
ஒரு பைத்தியக்காரத்தனமான கேள்வி இதோ உங்களுக்காக (மற்றும் என்னுடன் பொறுமையாக இருங்கள், நான் ஒரு கருத்தை நிரூபிக்கப் போகிறேன்):
"நீங்கள் காற்றை பெற்றெடுக்கப் போகிறீர்கள்!" என்று நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன நினைக்கீர்கள்!
ஒரு "காற்றுக் குழந்தை" அல்லது ஒரு "காற்றின் மகன்" எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? இல்லை! நிச்சயமாக இல்லை, அப்படிப்பட்ட ஒன்றைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை!
நான் அதைத்தான் சொல்ல வருகிறேன். மரியாளிடம், அவள் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்து தேவனுடைய குமாரனைப் பெற்றெடுப்பாள் என்று தேவதூதன் காபிரியேல் சொன்னபோது, நீங்கள் எனது இந்த விசித்திரமான கூற்றைப் படித்தபோது ஏற்பட்ட அதே குழப்பம் அவளுக்கும் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
காற்று எப்படி கண்ணுக்குத் தெரியாததோ, அப்படியே தேவனை யாரும் கண்டதில்லை. அவர்கள் அவருடைய பிரசன்னத்தை நம்பி, அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்கள், ஆனால் அவருக்குப் பிறப்பளிப்பது என்பது புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
இன்று, இயேசு எப்படி இருந்திருப்பார் என்பதனை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. அவர் ஒரு சாதாரண குழந்தையைப் போல இருந்தார் என்று வேதாகமத்திலிருந்து நாம் அறிவோம். மனுஷனான தேவன் என்ற கருத்து நமக்கு பழக்கமான ஒன்றாக இருக்கிறது. திரைப்படங்கள், தொடர்கள் (தி சோசன் தொடருக்கு ஆமென்!), சித்திரங்கள் அடங்கிய வேதாகம புத்தகங்கள், மற்றும் மிக முக்கியமாக, வேதகமத்திற்கு நன்றி, நாம் இயேசுவை கற்பனை செய்ய முடிகிறது.
ஆனால் மரியாளின் நாட்களில், யாரும் தேவனை நேருக்கு நேர் கண்டதில்லை. இந்தக் குழந்தைக்கு முகம் இருக்குமா? தேவனுக்கு எப்படி முகம் இருக்க முடியும்? இதுபோன்ற இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் மரியாளின் மனதில் எழுந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். தேவனை ஒரு குழந்தையாக கற்பனை செய்வதற்கு மரியாளுக்கு எந்தவிதமான முன்மாதிரியும் இல்லை.
2000 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தேவன் மனுஷனானார் என்ற கருத்துக்கு நாம் மிகவும் பழக்கப்பட்டுவிட்டோம், ஆனால் அதைப் பற்றி யோசிக்க நீங்கள் சற்று நிறுத்திப் பார்த்தால், பிரபஞ்சத்தின் சிருஷ்டிகருடைய மனித வடிவத்தை எடுத்துக்கொண்டு தம்மை ஒன்றுமில்லாதவராக மாற்றிக்கொண்டது (பிலிப்பியர் 2:7) இன்றும் வியக்கத்தக்க ஒரு அற்புதமே.
பூமிக்கு வந்த கடவுளைக் கொண்ட வேறு எந்த மதமும் இல்லை. நிச்சயமாக, ஒரே ஒரு தேவன் மட்டுமே இருக்கிறார், ஆனால் மற்ற மதங்களின் தெய்வங்கள் தங்கள் பின்பற்றுபவர்கள் ஒரு வகையான பரிசுத்தம், நிறைவு அல்லது தேவனுக்கு ஒப்பாக இருப்பது ஆகியவற்றைப் பெறும்படி, தயவு அல்லது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கக் கோருகின்றன.
ஆனால் இயேசு அப்படியில்லை, அவர்:
"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." - பிலிப்பியர் 2:6-8