கேம்ரனின் தலையை சுற்றவைக்கும் கேள்விகள் 🤯
கேம்ரனுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்று என்னவென்றால், அவர் என்னிடம் எதையாவது சொல்லும்போது, நான் ஒரு கோடி கேள்விகளைக் கேட்க முனைகிறேன். சில சமயங்களில் அவர் ஒரு திட்டம் அல்லது முன்மொழிவைப் பற்றி எனக்குத் தெரிவிப்பார், நான், "ஆனால் அது எப்படி ஆகும்?", "அது எப்போது நடக்கும்?", "இதில் யார் ஈடுபட்டுள்ளார்கள்?" என்று கேட்பேன். அவர் என்னைப் பார்த்து, "அன்பே, எல்லா விவரங்களும் இன்னும் எனக்கு தெரியாது, அது ஒரு யோசனை மட்டுமே" என்று சொல்வார்.
அதனால்தான், இயேசுவின் தாயான மரியாளைப் பற்றி நான் மிகவும் வியப்படைகிறேன், ஏனென்றால் அவர் ஒரே ஒரு கேள்வியை மட்டும்தான் கேட்டார், இவ்வாறு கூறப்பட்டபோது:
“இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.” (லூக்கா 1:31-32)
ஒரே ஒரு கேள்வி! அவர் கேட்டார், “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே” (லூக்கா 1:34). அதற்குப் பிறகு, வேறெதுவும் இல்லை, ஆனால் ஒரு எளிய "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்" (லூக்கா 1:38). 😳
அடுத்த முறை கேம்ரன் ஒரு யோசனையைச் சொல்லும்போது, நான் இந்த ஒரு-கேள்வி-மட்டும் அணுகுமுறையைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளேன். இதை அவர் நிச்சயமாக விரும்புவார் என்று நான் நம்புகிறேன். 🤪
ஆனால், நகைச்சுவையை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், இது மரியாள் தேவனிடத்தில் வைத்திருந்த விசுவாசத்தையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. அவர் தலையில் நிச்சயமாக டன் கணக்கில் கேள்விகள் சுழன்றிருக்கும், மேலும், கேம்ரன் சில நாட்களுக்கு முன்பு உங்களிடம் பகிர்ந்து கொண்டது போல், கவலைகளும் இருந்திருக்கும். ஆயினும், மரியாள் கர்த்தர் மேல் தன் நம்பிக்கையை வைக்கத் தேர்ந்தெடுத்தார்.
நாம் புதிய ஆண்டை நோக்கும்போது, இது உறுதி: தேவன் நம்மிடமிருந்து பெரிய விசுவாசத்தைக் கேட்பார். ஒருவேளை அல்ல, ஆனால் உத்தரவாதம். ஒவ்வொரு விசுவாசியும், நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்க அழைக்கப்படுகிறோம் (2 கொரிந்தியர் 5:6).
உங்கள் தலையை சுழல வைக்கும் சாத்தியமற்ற சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்ளும்போது, நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்? நீங்கள் இப்போது அந்தச் சூழ்நிலையில் இருந்தால், மரியாளின் வார்த்தைகளைச் சொல்லிப் பாருங்கள்: “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது.”