நான் தலையை மணலுக்குள் புதைக்க விரும்புகிறேன்! 🫣
நாம் ஒரு குழப்பமான உலகில் வாழ்கிறோம். சில சமயங்களில், விஷயங்கள் எவ்வளவு மோசமாக கட்டுப்பாட்டை மீறிச் செல்கின்றன என்பது என்னைத் தாக்குகிறது. போர்கள், அரசியல் படுகொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், சில சமயங்களில், எதுவும் நல்லதாக நடக்கவில்லை என்று தோன்றுகிறது.
நமது சொந்த நாடான இந்தியாவிலும் கூட, கோடிக் கணக்கான மக்கள் நவீன கால அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர், மேலும் மத ரீதியான துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகள் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன.
இத்தகைய அறிக்கைகளைக் கேட்கும்போது, தலையை மணலுக்குள் இட்டு புதைந்துகொள்ளும் ஆசை எழுகிறது. இந்த உலகின் பிரச்சினைகளின் பாரத்தால் மூழ்குவதை விட, உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் உங்களுக்கு முன் இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவது எளிதானது.
தேவகுமாரனாகிய இயேசுவைப் பெற்றெடுப்பார் என்ற செய்தியைப் பெற்ற பிறகு மரியாளின் பாடலை நான் வாசிக்கும்போது, அந்த முக்கியமான மற்றும் வாழ்க்கையை மாற்றும் தருணத்தில், அவள் தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களில் மட்டுமல்லாமல், சுற்றி இருந்த மற்ற பெரிய விஷயங்களிலும் கவனம் செலுத்தியது என்னை மிகவும் கவர்ந்தது.
அவளுடைய ஜெபம்/துதி மூன்று கட்டங்கள் வழியாகச் செல்கிறது :-
- தேவன் தனக்கு செய்தவற்றில் அவள் கவனம் செலுத்துகிறாள்: இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. – லூக்கா 1:48-49
- பின்னர் அவர் மற்றவர்களை நினைவுகூருகிறாள்:அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. – லூக்கா 1:50
- இறுதியாக, தேவன் ஏற்கனவே தன் தேசத்திற்காக—இஸ்ரவேலுக்காக—செய்ததற்கும், செய்யப் போவதற்கும் அவள் தேவனைத் துதிக்கிறாள்:நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள். – லூக்கா 1:54-55
மரியாளின் காலத்திலிருந்த செய்தி அறிக்கைகள் இன்றைய நிலையை விடச் சிறந்ததாக இருக்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் இஸ்ரவேல் ரோம ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது மற்றும் விடுதலையை மிகவும் எதிர்நோக்கியிருந்தது.
தன்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வின்போது, மரியாள் தன் தேசத்திற்காகவும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்காகவும் ஜெபிக்க நினைத்தது என்னைக் கவர்கிறது.
நான் சற்று நேர்மையாக கூறவேண்டுமானால்: நானும் அதையே செய்திருப்பேனா என்று எனக்குச் சந்தேகம் தான். ஆனால், நாமும் கூட நம்முடைய தேசத்திற்காக ஜெபிப்பதை நிறுத்தக்கூடாது, மேலும் தேவன் நமக்காகச் செய்வதற்காக மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்கு இது ஒரு அழகான நினைவுறுத்துதல்.