சிறந்த துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது அல்லது சிறந்த துணையாக எப்படி இருப்பது?
கேம்ரன் எனக்குக் கணவராகக் கிடைத்தது நான் நம்ப முடியாத அளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், அவருக்கு நான் நன்றியுள்ளவள் என்றும் நான் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஆம், திருமண வாழ்க்கையில் எங்களுக்கும் ஏற்றத் தாழ்வுகள் இருந்திருக்கின்றன, ஆனால் தேவபக்தியுள்ள, அன்பான மற்றும் தன்னலமற்ற ஒரு மனிதனைத் திருமணம் செய்து கொண்டது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்.
நாங்கள் சந்தித்த சோதனைகளின் போது உறுதியாக நிற்க கேம்ரன் எனக்கு உதவினார், மேலும் தேவன் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருடன் வாழ்க்கையின் புயல்களைச் சமாளிப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
மரியாளுக்கு யோசேப்பைப் பற்றி இதே உணர்வு இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
யோசேப்பும் மரியாளும் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் (மத்தேயு 1:18). அவள் பாவம் செய்ததாகக் கருதப்பட்டதால், யோசேப்பு மரியாளுக்கு மரண தண்டனை கேட்கும் உரிமை இருந்தது (லேவியராகமம் 20:10). இருப்பினும், அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவമാണப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான் (மத்தேயு 1:19). இது அவருடைய சிறந்த குணத்தின் முதல் அடையாளம்: அவர் கசப்பு நிறைந்தவராகவும் அல்லது பழிவாங்குபவராகவும் இருக்கவில்லை. அவர் நிராகரிக்கும் நிலையிலும் கூட ஒரு அன்பான பதிலைத் தேர்ந்தெடுத்தார்.
அவர் அவளை இரகசியமாக விவாகரத்து செய்யத் திட்டமிட்டார், ஆனால் ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றிச் சொன்னார்:
தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். – மத்தேயு 1:20-21
இந்தக் கட்டத்தில், யோசேப்புக்கு மீண்டும் ஒரு விருப்பத்தேர்வு இருந்தது: நம்பமுடியாத ஒரு விஷயத்தை–அதாவது, மாசற்ற கருத்தரிப்பை–நம்புவது, மற்றும் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்திக்கொள்வதன் மூலம் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தின் தீர்ப்பிடுதலை எதிர்கொள்வது; அல்லது எளிதான வழியைத் தேர்ந்தெடுத்து விலகிச் செல்வது.
யோசேப்பு நிலைத்து நின்றார், இது அவருக்குள்ளிருந்த பெரிய விசுவாசத்தைக் காட்டியது.
நீங்கள் இன்னும் திருமணம் ஆகாதவராக இருந்தால், இயேசு கிறிஸ்துவை உங்கள் கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்ட பிறகு, சரியான துணையைத் தேர்ந்தெடுப்பதுதான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிகுந்த விசுவாசமும் தேவபக்தியுள்ள குணமும் கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆனால், என்னைப் போல நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்தால், யோசேப்பு மரியாளுக்கு எப்படிப்பட்ட துணையாக இருந்தாரோ, அதேபோல்வ உங்கள் துணைக்கு நீங்களும் ஒரு சிறந்த துணையாக இருக்க உறுதியுடன் இருங்கள்!