• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 23 டிசம்பர் 2025

மரியாள் எப்படி உணர்ந்திருப்பாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்

வெளியீட்டு தேதி 23 டிசம்பர் 2025

மரியாளின் கண்ணோட்டத்தில் கிறிஸ்து பிறப்பு கதையை நாம் ஆராய்ந்து வரும் வேளையில், ஒரே ஒரு நினைவு எனக்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது.

எங்கள் மகன் ஜாக் (Zac) மூளையில் வைரஸ் தொற்று ஏற்பட்டதால் டிசம்பர் மாத தொடக்கத்தில் மும்பையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தான், அதால் 2021 கிறிஸ்துமஸை கேம்ரனும் நானும் மருத்துவமனையிலேயே கழித்தோம்.

ஜாக் செயற்கை சுவாசக் கருவியில் (ventilator) இருந்தபோது, ​​நாங்கள் அவனைத் தூக்க அனுமதிக்கப்படவில்லை. தொற்று அபாயம் ஏற்படும் என்று பயந்ததால், அவனைக் கண்டாலே அல்லது அருகில் இருந்தாலே போதும் என்ற நிலையில் இருந்தோம். அவனுக்கு அப்போது வெறும் 10 மாதங்கள் தான் ஆகியிருந்தன, என் தாய் உள்ளம் என் குழந்தையை அள்ளி அணைக்க வேண்டி மிகவும் துடித்தது.

தினமும் நான் மருத்துவர்களிடம், "நான் அவனை மீண்டும் எப்போது அணைக்க முடியும்?" என்று கேட்பேன். இறுதியாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஒரு மருத்துவர், “ஏன் நீங்கள் அவனுடன் படுக்கையில் பக்கத்தில் படுத்துக் கொள்ளக்கூடாது?” என்று சொன்னார். நான் அங்கே படுத்துக்கொண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு முதல்முறையாக என் குழந்தையின் உடலை என்னோடு நெருக்கமாக உணர்ந்தபோது, ​​என் முகத்தில் கண்ணீர் வழிந்தது. ஜாக் இன்னும் ஆபத்தான நிலையில்தான் இருந்தான், ஆனால் அந்த நேரத்தில், என் குழந்தையை என்னால் அணைத்துக்கொள்ள முடிவதைத் தவிர, வேறு சிறந்த கிறிஸ்துமஸ் பரிசை என்னால் நினைக்க முடியவில்லை.

அங்கே நான் மயக்கமுற்ற என் மகனை இறுக்கி அணைத்துக்கொண்டு படுத்திருந்தபோது, ​​திடீரென்று நான் நினைத்தேன், "மரியாளுக்கு இப்படித்தான் இருந்திருக்குமோ?" என்று.

அவள் விரும்பாத ஒரு இடத்தில், வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு நகரத்தில், உகந்த சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தன் முதல் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அப்படியிருந்தும், அவள் அங்கே தன் கைகளில் ஒரு அற்புதத்தை ஏந்திக்கொண்டிருந்தாள்.

ஜாக் பிறந்தபோது, ​​அவன் தனது முதல் கிறிஸ்துமஸை மருத்துவமனையில் கொண்டாடுவான் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல், மரியாளுக்கு தேவனுடைய குமாரனைப் பெற்றெடுக்கப் போகிறாள் என்று கேள்விப்பட்டபோது, ​​அவருடைய பிறப்பைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்.

பூமியில் நம்முடைய வாழ்க்கையின்போது, ​​சில சமயங்களில், எதிர்பாராத சூழ்நிலைகளில் நம்மை நாமே கண்டுகொள்வோம். இயேசுவின் தாய்க்கு கூட அதுதான் நடந்தது. ஆனாலும், வேதாகமம் நமக்கு வாக்குறுதி அளிக்கிறது:

"சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்."சங்கீதம் 30:5

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.