• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 24 டிசம்பர் 2025

பாவியும், வேசியும், அந்நியரும், விபச்சாரியும் மற்றும்… 🌟 மரியாளும் 🌟

வெளியீட்டு தேதி 24 டிசம்பர் 2025

நாளை இயேசு கிறிஸ்து பிறப்பு விழா!!

அதனோடு, மரியாள் கண்ணோட்டத்தில் அமைந்த நமது கிறிஸ்து பிறப்பு விழா தொடரின் முடிவுக்கு வந்துவிட்டோம்.

இன்று, ஒரு கணம் எடுத்து, மத்தேயு1 ல் காணப்படும் இயேசுவின் வம்ச வரலாற்றை நான் பார்க்க விரும்புகிறேன்.

இயேசுவின் பரம்பரையில் ஐந்து பெண்கள் பெயரிடப்பட்டுள்ளனர்: தாமார், ராகாப், ரூத், பத்சேபாள் மற்றும்… மரியாள்.

மரியாள் தனித்து நிற்கிறாள். தாமார் மற்றும் பத்த்சேபாள் போன்ற இழிவான பாவம் எதுவும் மரியாள் பற்றிப் பதிவு செய்யப்படவில்லை. அவள் ரூத் அல்லது ராகாப்பைப் போலப் புறஜாதிப் பெண் அல்ல. சர்ச்சைக்குரியதோ, சிக்கலான கடந்த காலமோ எதுவும் அவளிடம் இல்லை.

மத்தேயு 1-ல் உள்ள இயேசுவின் குடும்ப மரபுக் கணக்கு அவருடைய தகப்பனார் பக்கத்தை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தாலும், யோசேப்புடன் முடிவடைந்தாலும், மரியாள் அவருடைய தாயாகச் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மரியாள் எபிரேயப் பெண். மரியாள் கன்னி. மரியாள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டாள். அவள் நம்பிக்கையானவள், உண்மையுள்ளவள், கீழ்ப்படிந்தவள். இருந்தபோதிலும், மரியாவின் பெயர் தவிக்க முடியாத ஒன்றை நமக்குக் காட்டிறது: நாம் அனைவரும் ஒரே வழியில் தான் இரட்சிப்பைப் பெறுகிறோம்.

இழிவான பாவி (தாமார்), வெளிப்படையான வேசி (ராகாப்), பாதுகாப்பற்ற அந்நியப் பெண்(ரூத்), உடைந்த விபச்சாரி (பத்சேபாள்) மற்றும் நல்ல செயல்களின் நீண்ட பட்டியலைக் கொண்டவர் (மரியாள்) – இவர்கள் அனைவருக்கும் ஒரு இரட்சகர் தேவைப்பட்டார்.

தேவகுமாரனின் தாயாகிய மரியாளும், குற்றமற்ற கன்னியாக இருந்தாலும், தன் சொந்தக் குமாரன் கொண்டுவரும் இரட்சிப்பு அவளுக்கும் தேவைப்பட்டது.

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். – மத்தேயு 1:21

கிறிஸ்து பிறப்பு விழாவின் நற்செய்தி என்னவென்றால், இயேசு நமக்காகச் செய்ததை, நமது சிறந்த நாளில் நாம் செய்யும் சிறந்த செயல்களால் ஒருபோதும் செய்ய முடியாது, மேலும் நமது மோசமான பாவத்தால் ஒருபோதும் அழிக்க முடியாது.

நீங்கள் மரியாள் போல வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புள்ள விசுவாசியாக இருந்தாலும் சரி, அல்லது இயேசுவின் பரம்பரையில் உள்ள மற்ற பெண்களின் கதைகளுடன் உங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டாலும் சரி, இயேசு உங்களை இரட்சிக்கவே பூமிக்கு வந்தார்.

அவர் உங்கள் இழிவான பாவத்தைச் சுமந்து, உங்கள் கடந்த காலத்தை மீட்டெடுத்து, உங்களைத் தமது குடும்பத்தில் கொண்டுவந்து, உங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, பரலோகத்திற்குச் செல்வதற்காக நீங்கள் உங்கள் வழியைச் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து உங்களை விடுவித்தார்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.