• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 31 டிசம்பர் 2025

2025-க்கு பிரியாவிடை

வெளியீட்டு தேதி 31 டிசம்பர் 2025

நாம் ஆண்டின் இறுதி நாளை அடைந்துவிட்டோம்!! 😱

இந்த ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத ஆசீர்வாதங்களாலும், அபாத்திரமான தயவாலும் நிரம்பி இருந்தது என்று நம்புகிறேன்.

நாம் புதிய ஆண்டிற்குள் கடந்து செல்லும்போது, நோக்கத்துடன் அதைத் தொடருவோம். இந்த வாரம் ஒவ்வொரு நாளும், புதிய ஆண்டைச் சரியாகத் தொடங்க உதவும் ஒரு கேள்வியைப் பற்றி நாம் சிந்தித்து வந்தோம். இன்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ள நான் விரும்பும் கேள்வி: கடந்த ஆண்டில் நான் மிகவும் நன்றி செலுத்தியது எதற்காக?

நான் 2025-ஐ திரும்பிப் பார்க்கும்போது, நன்றி உணர்வால் நிரம்பாமல் இருக்க முடியவில்லை. ஆம், இது எங்கள் 5 வயது மகன் ஜாக் (Zac) மரணமடைந்ததால் என் வாழ்க்கையின் கடினமான ஆண்டுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். இருப்பினும், எங்கள் குடும்பத்தை தேவன் எவ்வாறு தாங்கினார் என்பதை நான் திரும்பிப் பார்க்கும்போது, நன்றி உணர்வு பொங்கி வழிகிறது.

நீங்கள் திரும்பிப் பார்க்கத் தொடங்கும்போது, நீங்கள் நன்றி சொல் விரும்பும், குறைந்தது 50 விஷயங்களின் பட்டியலை உருவாக்கவும், பின்னர் ஒவ்வொன்றிற்காகவும் ஆண்டவருக்கு நன்றி சொல்லவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் கடினமான காலங்களில் கடந்து போய்க் கொண்டிருந்தால், கடினமான எல்லா இடங்களிலும் ஆண்டவரின் கருணையை நீங்கள் கண்ட 10 வழிகளை எழுத நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன்.

"கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வ காலத்தின் அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்."சங்கீதம் 77:11-12

உங்களுக்கு விருப்பமிருந்தால், இங்கே ஒரு சிறப்புப் பயிற்சி: இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய, ஆனால் அதைப் பற்றி அறிந்திராத சிலருக்கு நன்றி அட்டைகளை எழுதுங்கள்.

நன்றியுடன் இருப்பது மற்றும் அந்த நன்றியை தேவனிடமும் (மற்றும் மற்றவர்களிடமும்) வெளிப்படுத்துவது முக்கியம். நாம் நன்றியுள்ள விஷயங்கள் அனைத்தையும் பட்டியலிடுவது, தேவன் நமக்கு எவ்வளவு அதிசயிக்கத்தக்க உண்மையுள்ளவராக இருந்தார்/இருக்கிறார் என்பதை உணர உதவுகிறது. இது எரேமியாவுடன் சேர்ந்துபோக நாம் இவ்வாறு கூற வழிவகுக்கிறது:

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவரது இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்.புலம்பல் 3:22-23

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.