• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 2 ஜனவரி 2026

2026ல் உங்கள் சமாதானத்தை அதிகரியுங்கள்

வெளியீட்டு தேதி 2 ஜனவரி 2026

இந்த ஆண்டைச் சரியாக தொடங்க 7 கேள்விகள் என்ற தொடரின் 5-வது நாளில் நாம் இருக்கிறோம். esto உங்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிய நான் விரும்புகிறேன். இந்த கேள்விகள் உங்களுக்கு உதவியாக உள்ளதா?

இன்றைய கேள்வி இதோ : இந்த ஆண்டில் நான் முயற்சி செய்யக்கூடிய ஒரு ஆவிக்குரிய ஒழுக்கம் எது?

ஆவிக்குரிய ஒழுக்கங்கள் என்பது ஆண்டவருடனான உங்கள் உறவில் நீங்கள் நெருங்கி வளர உதவும் பழக்கவழக்கங்கள் ஆகும். அவற்றில் பொதுவான சில:

  • ஜெபம்
  • தியானம்
  • உபவாசம்
  • வேத ஆராய்ச்சி
  • எளிமை
  • தனிமை மற்றும் அமைதி
  • ஓய்வுநாள் ஆசரிப்பு
  • கீழ்ப்படிதல்
  • ஊழியம்/சேவை
  • பாவ அறிக்கை செய்தல்
  • ஆராதனை
  • வேறொருவருக்கு வழிகாட்டுதல்
  • கொண்டாடுதல்

இந்தப் பட்டியலை வாசிக்கும்போது, "பரிபூரண கிறிஸ்தவராக" இருப்பதற்கான ஒரு பெரிய வேலை பட்டியலை போலத் தோன்றலாம். ஆனால் நினைவிருக்கட்டும்: ஆவிக்குரிய ஒழுக்கங்கள் உங்களுக்கு உதவவே உருவாக்கப்பட்டவை, உங்களைச் சுமைப்படுத்த அல்ல. இவை ஆண்டவரின் அன்பைப் பெறுவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய கட்டாயப் பட்டியலும் அல்ல. காலப்போக்கில், இந்தப் பழக்கங்களை உங்கள் வாழ்க்கையில் இணைத்துக்கொள்வது அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆண்டவருடனான நெருக்கத்தையும் தரும்.

"சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு, சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது."1 தீமோத்தேயு 4:7-8

பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் காண்பிக்கும்படி அவரிடம் கேளுங்கள்:

  • நீங்கள் எதிலிருந்தாவது உபவாசிக்க முடியுமா?
  • உங்கள் உடைமைகளையோ, கால அட்டவணையையோ அல்லது உணவையோ எளிமைப்படுத்த வழி இருக்கிறதா?
  • ஆண்டவரை அறிந்துகொள்வதற்கும் ஓய்வெடுப்பதற்கும் என ஒரு நாளை அர்ப்பணிக்கும் பழக்கத்தை உங்களால் உருவாக்க முடியுமா?
  • நண்பர்களுக்காகவும், நண்பர்களோடும் சேர்ந்து வழக்கமாக ஜெபிக்கத் தொடங்க முடியுமா?

கடந்த ஆண்டில் நான் தனிப்பட்ட முறையில் மீண்டும் கண்டறிந்த ஒரு ஆவிக்குரிய ஒழுக்கம் "தனிமை மற்றும் அமைதி". இப்போது நான் ஆண்டவரோடு செலவிடும் நேரத்தை 15 நிமிட முழுமையான அமைதியுடன் தொடங்குகிறேன். ஜெபம், ஆராதனை அல்லது வேதாகமம் வாசிப்பதற்கு முன்பாக, கண்களை மூடிக்கொண்டு, ஆண்டவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளத் தயாரான இதயத்தோடு அமைதியாக அமர்ந்திருக்கிறேன்: இசை இல்லை, வார்த்தைகள் இல்லை, நானும் என் ஆண்டவரும் மட்டுமே.

உங்களுக்கு இதில் ஆர்வமிருந்தால், ஜெனி எழுதிய "தனிமையும் அமைதியும்" என்ற வாசிப்புத் திட்டம் YouVersion BibleApp-ல் உள்ளது. அதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.