நான் உணர்வதுபோல உணர்கிறேன்…
இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நம்முடைய உணர்வுகளை முழுமையாக உணர்வதன் முக்கியத்துவத்தைதான். இது கேட்பதற்குச் சற்று விசித்திரமாக இருக்கலாம், ஆனால் நான் சொல்லவருவதைப் பொறுமையாக கேளுங்கள்.
நம் அனைவருக்கும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் உண்டு, இயேசுவுக்கும் அவை இருந்தன (உதாரணமாகப் பார்க்க: யோவான் 11:35, மாற்கு 3:5, மற்றும் மத்தேயு 26:37). அதே வேளையில், உணர்ச்சிகள் நம்மை ஏமாற்றக்கூடியவை என்பதையும் நாம் அறிவோம். எனவேதான் நாம் வளரும்போது, அவற்றைச் சார்ந்து இருக்கக்கூடாது என்று கற்பிக்கப்படுகிறோம்.
"எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?" – எரேமியா 17:9
ஆனால், நம் உணர்வுகளைப் புறக்கணிப்பதிலோ அல்லது அலட்சியப்படுத்துவதிலோ உள்ள ஆபத்து என்னவென்றால், அவை மறையாமல் நமக்குள் தங்கியிருக்கும். இதற்குத் தீர்வு அவற்றை அடக்கி வைப்பதல்ல, மாறாக அவற்றை அப்படியே உணர்வதுதான். உங்கள் உணர்வுகளை கவனித்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, பின்பு ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
இந்த புத்தாண்டைத் தொடங்கும்போது நீங்கள் உங்களை நோக்கிக் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: 'இந்த புதிய ஆண்டைத் தொடங்கும்போது நான் எதை உணர்கிறேன்?'
அதற்கு உதவியாக சில கூடுதல் கேள்விகள் இதோ:
- கடந்த ஆண்டைப் பற்றி வர்ணிக்க நான் எந்தச் சொற்களைப் பயன்படுத்துவேன்? அல்லது எனது தற்போதைய மனநிலையை விவரிக்க எதைச் சொல்வேன்?
- நான் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்?
- எதைக் குறித்து நான் பயப்படுகிறேன்?
- எதனால் நான் சோர்வடைந்துள்ளேன்?
- நான் எதை எதிர்பார்க்கிறேன் (நம்பியிருக்கிறேன்)?
- எந்த விஷயம் எனக்கு விரக்தியைத் தருகிறது அல்லது எதைப் புரிந்துகொள்ள நான் சிரமப்படுகிறேன்?
தனது உணர்வுகளை உணர்ந்து, பின்பு அவற்றை ஆண்டவரிடம் ஒப்படைப்பதில் வல்லவராக இருந்தவர் தாவீது ராஜா.
உதாரணமாக, சங்கீதம் 139-ஐ வாசியுங்கள். அங்கே தாவீது தனது பல்வேறு உணர்ச்சிகளையும் ஆண்டவரிடம் கொட்டித் தீர்ப்பதை காணலாம்.
அன்பரே, தாவீது எழுதியவற்றில் எதிலாவது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?
தாவீது தனது உணர்ச்சிகரமான வெளிப்பாட்டை இந்த வார்த்தைகளுடன் முடிக்கிறார்:
தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். – சங்கீதம் 139:23-24
உணர்வுகள் என்பவை வெறும் உணர்வுகள்தான் என்பதை தாவீது அறிந்திருந்தார், எனவேதான் அவற்றை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும்படி அவர் ஆண்டவரிடம் வேண்டுகிறார்.
அன்பரே, உங்கள் உண்மையான மற்றும் நேர்மையான உணர்வுகளை ஆண்டவரிடம் வெளிப்படுத்திய பிறகு, தாவீதின் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி நீங்களும் ஜெபியுங்கள்.