• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 17 ஜனவரி 2026

தூக்கத்தில் தொந்தரவு செய்யும் கொசுவைப் போல! 🦟

வெளியீட்டு தேதி 17 ஜனவரி 2026

நீங்கள் நிம்மதியாக தூங்க முயற்சிக்கும்போது, ஒரு கொசு உங்கள் காதருகில் வந்து 'வொய்ங்' என்று ரீங்கு ஆரமிடும் அந்த எரிச்சலூட்டும் சத்தம் உங்களுக்குத் தெரியுமா? அல்லது ஒரு ஈ உங்கள் முகத்தில் மீண்டும் மீண்டும் வந்து அமர்ந்தால் எப்படி இருக்கும்? அது நம் பொறுமையைச் சோதித்து, நம்மை நிலைகுலைய செய்துவிடும்!

நான் இதைப்பற்றி இதற்கு முன் யோசித்ததே இல்லை, ஆனால் ஆடுகளுக்கும் இதே போன்ற ஒரு பிரச்சனை இருக்கிறது. சங்கீதம் 23-5-ல் தாவீது எழுதிய ஒரு பகுதியின் விளக்கத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன்:

"...நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது."சங்கீதம் 23:5

ஆடுகளின் கண்கள் மற்றும் மூக்கு துவாரங்களில் முட்டையிட முயலும் ஒருவகை ஈக்களால் ஆடுகள் அடிக்கடி தொந்தரவுக்கு உள்ளாகின்றன. அந்த முட்டைகள் புழுக்களாக மாறும்போது, அவை ஆடுகளுக்கு மிகந்த வேதனையைத் தருகின்றன. அந்த தாங்க முடியாத வலியினால் ஆடுகள் தங்கள் தலையைப் பாறைகளில் மோதிக்கொள்ளும், சில சமயங்களில் அது மரணத்தில் கூட முடியும்.

இந்த ஈக்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்கவும், பூச்சிகளின் தொந்தரவு இல்லாமல் ஆடுகள் நிம்மதியாக இருக்கவும், ஒரு மேய்ப்பன் ஆட்டின் தலையில் எண்ணெயைத் தடவுகிறான். இது ஆடுகளுக்கு அமைதியைத் தருகிறது.

இது பவுல் எபேசியர் 6:17-ல் விவரிக்கும் 'இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தை' எனக்கு நினைவூட்டுகிறது. நமது மனதையும் எண்ணங்களையும் சுற்றியுள்ள ஆவிக்குரிய தாக்குதல்கள், சந்தேகங்கள் மற்றும் நச்சுத்தன்மையான எண்ணங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவே இந்தத் தலைக்கவசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 கொரிந்தியர் 1:21-22-ல் பவுல் இவ்விதமாக எழுதுகிறார்:

"உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்."

, நீங்கள் எப்போதாவது தீமையான எண்ணங்களால் போராடுகிறீர்களா? கவலை உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறதா? மன வேதனையினால் "தலையைச் சுவற்றில் மோதிக்கொள்வது" போன்ற உணர்வு உங்களுக்கு இருக்கிறதா?

ஒரு மேய்ப்பன் ஆட்டை அபிஷேகம் செய்வது போலவே, தேவனும் உங்கள் தலையை அபிஷேகம் செய்ய விரும்புகிறார்!

நாம் ஜெபிப்போம்:

பரலோகப் பிதாவே, உம்மிடம் குறையாத அபிஷேகத் தைலம் இருப்பதற்காக உமக்கு நன்றி. என்னை அபிஷேகம் செய்து, என் மனதை உம்முடைய முத்திரையினால் மூடி, இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தை என் தலையில் வைக்கும்படி வேண்டுகிறேன். என் மனதிற்கும் என் எண்ணங்களுக்கும் உம்முடைய சமாதானத்தைக் கட்டளையிடும். என் பாத்திரம் நிரம்பி வழியட்டும். இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் பிதாவே, ஆமென்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.