• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
    • VI Vietnamese
வெளியீட்டு தேதி 23 ஜனவரி 2026

நாமும் கோலியாத்தைப் போன்றவர்களா? 😱

வெளியீட்டு தேதி 23 ஜனவரி 2026

சூப்பர் ஹீரோ படங்கள் ஏன் இவ்வளவு பிரபலமாக இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

ஏனென்றால், கற்பனையில், அந்த ஹீரோவின் இடத்தில் நாம் இருந்தால், நாமும் அவர்களைப் போலவே தைரியமாகவும் பலமாகவும் இருப்போம் என்று நினைக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். நம்மால் அந்த நல்ல கதாபாத்திரத்தோடு நம்மைப் பொருத்திக்கொள்ள முடிகிறது; நமக்குள் ஒரு ஹீரோ மறைந்திருப்பதாக நாம் நம்புகிறோம்.

ஆனால், ஒருவேளை அந்த வில்லனுக்கும் நமக்கும் அதிக ஒற்றுமைகள் இருந்தால்? அதைப்பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? 🤔

இந்த வாரம் நாம் தாவீது மற்றும் கோலியாத் கதையை படித்து வருகிறோம். இதில் பலரும் விரும்பாத ஒரு கருத்து என்னிடம் உள்ளது: நமக்கு தாவீதை விட கோலியாத்திடம் தான் அதிக ஒற்றுமைகள் இருக்கலாம். 😳

மனித இனத்தின் அனைத்து தவறான குணங்களின் உருவகமாகவே கோலியாத் இருந்தான். அவன் தன்மீது அதிக மையங்கொண்டவனாக, தேவனை நிந்திக்கிறவனாக, அகந்தை கொண்டவனாக மற்றும் யாராலும் வெல்ல முடியாதவன் என்று தன்னை நினைத்துக் கொண்டவனாக இருந்தான்.

அவன் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய பாவி. இதை ஒத்துக்கொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் நாமும் அப்படித்தான்:

"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி..." ரோமர் 3:23

கோலியாத் கொல்லப்பட வேண்டியிருந்தது. வேதாகமமும் நம்முடைய மரணத்தை பற்றிப் பேசுகிறது:

"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்." – கலாத்தியர் 2:20

தாவீது கோலியாத்தைக் கொன்றான்; நாம் 'தாவீதின் குமாரன்' (மத்தேயு 1:1) என்று அழைக்கப்படும் இயேசுவோடுகூட மரிக்கிறோம்:

"கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்." – ரோமர் 6:3-5

நமது 'தாவீது' (இயேசு) நம்மை ஒரு கவண் கல்லால் கொல்லவில்லை; மாறாக, ஞானஸ்நானத்தின் மூலம் நமது பழைய வாழ்க்கையை அடக்கம் செய்து, நாம் அவரோடு மீண்டும் உயிர்த்தெழச் செய்கிறார்.

இது ஆச்சரியமாக இல்லையா?

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.