• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 27 ஜனவரி 2026

பரலோகத்திற்கு ஒரு சேனை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

வெளியீட்டு தேதி 27 ஜனவரி 2026

கடந்த வாரம், விவிலியத்தின் மிகப்புகழ் பெற்ற போரான 'தாவீது - கோலியாத்' மோதலைப் பற்றி ஜெனி ஒரு அழகான தொடரை எழுதியிருந்தார். இந்த வாரம் நாம் தேவனுடைய நாமங்களை பற்றிப் பார்த்து வருகிறோம். தாவீது கோலியாத்தை எதிர்கொள்ளப் போகும் அந்தத் தருணத்தில், தேவனை ஒரு குறிப்பிட்ட பெயரால் அழைக்கிறார்: அடோனாய் ஸ்வாவோத் (Adonai Tzva’ot) — அதாவது சேனைகளின் கர்த்தர்.

"தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன் என்றார்."1 சாமுவேல் 17:45

"சேனைகளின் கர்த்தர்" என்றால், தேவன் பரலோகத் தூதர்கள் முதல் பூமியின் இராணுவங்கள் வரை, ஏன் படைப்பின் மிகச்சிறிய அணுக்கள் வரை அனைத்திற்கும் மேலான உயர்ந்த படைத்தலைவர் என்று பொருள். இந்தப் பெயர் அவருக்கு இருக்கும் முழுமையான வல்லமை, அதிகாரம் மற்றும் படைப்புகள் அனைத்தின் மீதும் அவருக்கு இருக்கும் இறையாண்மையைக் காட்டுகிறது.

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில், இது "பரலோக சேனைகளின் கர்த்தர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தாவீது ஏன் பயப்படவில்லை என்பதில் இப்போது ஆச்சரியமே இல்லை. அவர் ஒரு இராட்சத மனிதனை எதிர்கொண்டிருக்கலாம், ஆனால் பரலோகத்தின் படைகள் தன் பக்கம் இருக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார்!

நாமும் ஒரு போராட்டத்தை எதிர்கொள்ளும்போது, இந்தச் சேனைகளின் கர்த்தரை நோக்கி கூப்பிடலாம்.

அன்னாள் மிகுந்த மனவேதனையில் இருந்தபோது அப்படிதான் செய்தாள் (1 சாமுவேல் 1:10-11):

"அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்.."

நீங்கள் எப்படிப்பட்ட போராட்டத்தை எதிர்கொண்டிருந்தாலும், சேனைகளின் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். இதோ இந்த வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்:

"செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.." – சகரியா 4:6

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.