• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 5 பிப்ரவரி 2026

உங்கள் நண்பர்கள் யார்?

வெளியீட்டு தேதி 5 பிப்ரவரி 2026

“எல்லாவற்றையும் துறந்து இறைவனிடம் ஒப்படைப்போம்” எனும் நமது தொடரின் நான்காம் நாளில் நாம் இருக்கிறோம்.

இன்று, இதனை நமது நட்புமுறைக்கு எவ்வாறு பொருத்துவது என்பதைப் பற்றிச் சிந்திக்கப்போகிறோம்: தீய தாக்கத்தை ஏற்படுத்தும் நண்பர்களைத் தவிர்த்துவிட்டு, சரியான நண்பர்களை நோக்கி இறைவன் உங்களை வழிநடத்த இடம் கொடுங்கள்.

ஆழமான, உண்மையான மற்றும் இறைப்பற்றுள்ள நட்புகளை விவிலியம் ஊக்குவிக்கிறது. அத்தகைய நண்பர்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது:“சினேகிதன் எந்நேரமும் சிநேகிப்பான்; இக்கட்டுக்கு உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” – நீதிமொழிகள் 17:17

“நண்பனின் இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து பிறக்கும் இனிமை இதமானது.” – நீதிமொழிகள் 27:9

அதே வேளையில், தவறான நட்புகளால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றியும் அது நம்மை எச்சரிக்கிறது:“நண்பர்களைக் கொண்டவன் அழிவுக்கு ஏதுவாகலாம்; ஆனால் சகோதரனைப்பார்க்கிலும் அதிகமாய் பற்றுள்ள நண்பனும் உண்டு.” – நீதிமொழிகள் 18:24

“நீதிமான் தன் நண்பனை கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறான்; ஆனால் துன்மார்க்கரின் வழியோ அவர்களைத் தவறாக வழிநடத்துகிறது.” – நீதிமொழிகள் 12:26

“ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” – நீதிமொழிகள் 13:20

“கோபக்காரனுக்குத் தோழனாகாதே; மூர்க்கனுடனே நடவாதே. அப்படிச் செய்தால் நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை உண்டாக்குவாய்.” – நீதிமொழிகள் 22:24-25

இதன் பொருள் உங்களின் நண்பர்கள் அனைவரும் விசுவாசிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல; இயேசுவை (இன்னும்) அறிந்திராதவர்களுடன் நட்புடன் இருப்பதும், உங்கள் செயல்களின் மூலம் இறைவனின் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவதும் சிறந்தது.

எனினும், உங்கள் நண்பர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் வற்புறுத்தலால் நீங்கள் பாவத்திற்குள் வழிநடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்:

“என் மகனே, பாவிகள் உனக்குத் துப்போதனை செய்தாலும் நீ சம்மதிக்காதே. என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்கு.” – நீதிமொழிகள் 1:10,15

தீய நட்புகள் நம்மைப் புறங்கூறுதல், துன்புறுத்துதல், கோபம், இச்சை, பொறாமை போன்ற பல பாவங்களுக்குள் இழுத்துச் செல்லக்கூடும்.

உங்களுக்கு நல்வழி காட்டாத நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களைத் தவிர்த்து விடுவதற்கான ஒரு விழிப்புணர்வு அழைப்பாக இதனை எடுத்துக்கொள்ளுங்கள்!

பரலோகத் தந்தையே, தீய நட்புகளை அடையாளம் காணும் ஞானத்தையும், அவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் பலத்தையும், இறைப்பற்றுள்ள புதிய நண்பர்களைத் தேடும் துணிவையும் அந்ந தடவியை அருளுவீராக. ஆமென்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.