பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்தப் பாடம்
பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடங்களில் ஒன்று வரலாறு. பழங்கால கதைகளை வாசிப்பதும், அக்கால வாழ்க்கை מுறை எவ்வாறு இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதும் எனக்கு பிடிக்கும். இன்றும் கூட, வேதாகமத்தை அதன் வரலாற்றுப் பின்னணியோடு ஆழமாக புரிந்துகொள்வதற்காக வரலாற்றை கற்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல சிறந்த பாடங்கள் உள்ளன, ஆனால் எப்போதும் கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது நல்லதல்ல. பிலிப்பியர் 3-ஆம் அதிகாரத்தில், பவுல் தான் ஒரு காலத்தில் உயர்வாகக் கருதிய அனைத்தையும்—தனது சாதனைகள், நற்செயல்கள் மற்றும் பாரம்பரியம் என அனைத்தையும்—ஆண்டவரின் மகிமையைத் தேடுவதற்காகவும், இயேசுவை அறிந்துகொள்வதற்காகவும், அவரைப்போல மாறுவதற்க்காகவும் கைவிடுவதைப் பற்றி பேசுகிறார்.
பவுல் மிகுந்த தாழ்மையுடன் இவ்வாறு கூறுகிறார்: "சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி," (பிலிப்பியர் 3:13)
இதே போன்ற ஒரு செய்தி வேதாகமத்தின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது:
"முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்." - ஏசாயா 43:18
"கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல.." – லூக்கா 9:62
வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு, கடந்த காலத்தை மறப்பது ஒரு முக்கியத் திறவுகோலாகும். பிசாசு எப்போதும் நமது கடந்த காலத்தை, குறிப்பாக நமது பாவங்களையும் தவறுகளையும் நமக்கு நினைவூட்ட முயல்வான். இவ்வுலகமும் கூட பெரும்பாலும் ஒரு மனிதனை அவனது கடந்த கால வெற்றிகள் அல்லது தோல்விகளைக் கொண்டே வரையறுக்கிறது.
உங்கள் கடந்த காலத்தின் சில பகுதிகள் உங்களை வரையறுக்கின்றனவா? கடந்த காலம் எப்படி இருந்தது என்பதை எண்ணி, உங்கள் மனதிற்குள் அவற்றையே மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் கடந்த காலத்தை விட்டுவிடுங்கள்; தேவன் உங்கள் எதிர்காலத்தை உங்களுக்கு நினைவூட்ட இடம் கொடுங்கள்.
"இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ள இருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின." – 2 கொரிந்தியர் 5:17
சி.எஸ். லூயிஸின் (C.S. Lewis) சொற்களில் கூறுவதானால்:
"நாம் விட்டுச் செல்வதை விட, மிகச் சிறந்தவை நமக்காகக் காத்திருக்கின்றன."