ஒரு உயிரை எத்தனை முறை காப்பாற்ற முடியும்?
யாராவது எப்போதாவது உங்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்களா? அப்படி இருந்தால், உங்களை காப்பாற்றியது யார், உங்கள் வாழ்க்கைத் துணையா?
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் நான் இதுவரை இருந்ததில்லை என்று நினைக்கிறேன், ஆனால் கேம்ரன்(என் கணவர்) ஒன்றுக்கும் மேற்பட்ட முறை காயத்திலிருந்தோ அல்லது தர்மசங்கடமான சூழ்நிலையிலிருந்தோ என்னைக் காப்பாற்றியிருக்கிறார். 😅
வேதாகமத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை உயிர் காப்பாற்றப்பட்ட ஒரு நபர் மோசே. ஒவ்வொரு முறையும் அவரது உயிர் காப்பாற்றப்பட்டதற்கு ஒரு பெண்ணே காரணமாக இருந்தார். முதலில், தாங்கள் பிரசவம் பார்த்த ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற பார்வோனின் கட்டளைக்குத் தைரியமாகக் கீழ்ப்படியாத மருத்துவச்சிகளான சிப்பிராளும் பூவாளும். பின்னர் மோசே கொலைசெய்யப்படாமல் இருக்க மறைத்து வைத்த அவரது தாய். அடுத்து, அவர் மீது இரக்கம் காட்டி, தனது தந்தையின் கொலைகாரக் கைகளிலிருந்து அவரைப் பாதுகாத்து, தனது சொந்த மகனாகத் தத்தெடுத்த பார்வோனின் மகள்.
இறுதியாக, மோசேயின் பிற்கால வாழ்வில், அவரது மனைவியான மீதியானியப் பெண் சிப்போராள் தான் அவரது உயிரைக் காப்பாற்றினார், ஏனென்றால் அவர் கொல்லப்படவிருந்தார்... அதுவும் தேவனால்! 🤔
"வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார். அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள். பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்." – யாத்திராகமம் 4:24-26
வேதாகமத்தில் உள்ள கதைகளில் எனக்குச் சிறிதும் புரியாத மற்றும் ஜீரணிக்கக் கடினமான கதைகளில் இதுவும் ஒன்று. தேவன் ஏன் முட்செடியில் மோசேக்குத் தரிசனமாகி, வரலாற்றிலேயே மிகச்சிறந்த இஸ்ரவேல் தலைவராக இருக்கும்படி அவரை அழைத்துவிட்டு, சில வசனங்களுக்குப் பிறகு அவரைத் தண்டித்து உயிரை எடுக்கப் பார்க்க வேண்டும்?!?
மீதியானிய மற்றும் இஸ்ரவேல் கலாச்சாரம், விருத்தசேதனம் செய்யும் வழக்கம் மற்றும் வேதாகமத்தின் மூல உரை ஆகியவற்றின் அனைத்து அடுக்குகளையும் விரிவாகப் பார்க்கும்போது இந்தக் கதையைச் சந்தேகத்திற்கு இடமின்றி நன்றாகப் புரிந்துகொள்ள முடியும், ஆனால் அது இன்றைய 'அதிசயத்தின்’ எல்லைக்கு அப்பாற்பட்டது.
இருந்தாலும், இந்த விசித்திரமான கதையிலிருந்து ஒரு அழகான கருத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: உண்மையான தலைமைத்துவம் என்பது வீட்டிலிருந்தே தொடங்குகிறது (1 தீமோத்தேயு 3:4-5). பழைய ஏற்பாட்டிற்கான தங்களின் விளக்கவுரையில், கெயில் மற்றும் டெலிட்ச் (Keil and Delitzsche) இப்படிக் குறிப்பிடுகிறார்கள்:
"மோசே தெய்வீகப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டுமென்றால், அவர் முதலாவதாகத் தனது சொந்த வீட்டில் கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரராக இருப்பதை நிரூபிக்க வேண்டும்."
விருத்தசேதனம் இப்போது ஒரு கட்டாயத் தேவை அல்ல (1 கொரிந்தியர் 7:19), ஆனால் நமது குடும்பத்தைச் சிறப்பாக வழிநடத்த நாம் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.
இன்று முதல் நீங்கள் செய்யத் தொடங்கக்கூடிய ஒரு காரியத்தை உங்களால் யோசிக்க முடிகிறதா?