அவர்கள் எல்லோரும் அவர்மேல் கை வைத்தார்கள்!
இன்று புனித சனிக்கிழமை, இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கும் அவர் உயிர்த்தெழுந்ததற்கும் இடைப்பட்ட நாள். புனித சனிக்கிழமை பாரம்பரியமாக துக்கம் அனுசரிப்பதற்கும், காத்திருப்பதற்கும் மற்றும் அமைதியான தியானத்திற்குமான நாளாகக் கருதப்படுகிறது.
எனவே, இயேசு இறப்பதற்கு சற்று முன் சொன்ன கடைசி வார்த்தைகளை நாம் ஒன்றாகத் தியானிப்போம்:
“இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.” – லூக்கா 23:46
சுமார் 12 மணிநேரத்திற்கு, இயேசு பலவிதமான கைகளால் கையாளப்பட்டார். அவரை அடித்த கைகள். அவருடைய தாடியைப் பிடுங்கி, அவர் தலையில் முள்முடியைத் திணித்த கைகள். சிலுவையில் அவருடைய மணிக்கட்டுகளிலும் கால்களிலும் ஆணிகளை அறைந்த கைகள்.
ஆனால் இறுதியில், இயேசு அந்தக் கைகளிடம் தனது ஆவியை ஒப்புவிக்கவில்லை. அவர் ரோம போர்வீரர்களிடமோ அல்லது யூத மதத் தலைவர்களிடமோ சரணடையவில்லை. அவர் தனது ஆவியை தேவனுடைய கைகளில் ஒப்புவித்தார்.
இவை அனைத்தும் நடந்துகொண்டிருந்த நேரத்திலும், எல்லாமே தேவனுடைய கட்டுப்பாட்டிலும் அவருடைய திட்டத்தின்படியே நிறைவேறிக்கொண்டிருந்தது. அவர்கள் அவருடைய சரீரத்தை எவ்வளவுதான் சித்திரவதை செய்து துஷ்பிரயோகம் செய்தாலும், இயேசுவின் ஆத்துமாவை அவர்களால் பறிக்கவோ அல்லது உடைக்கவோ முடியவில்லை. அது பிதாவுக்குச் சொந்தமாயிருந்தது.
இது யோவான் 10:27-30-ல் இயேசு சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது:
“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.” – யோவான் 10:27-30
இயேசுவைப் போலவே, நம்முடைய ஆவிகளும் பாதுகாப்பானவை, அவற்றை ஒருபோதும் தேவனுடைய கைகளிலிருந்து பறிக்க முடியாது. நாம் இயேசுவை விசுவாசிக்கத் தேர்ந்தெடுக்கும்போது, நம்முடைய ஆவி என்றென்றும் அவருக்குச் சொந்தமாகிவிடுகிறது. அனைத்துமே தேவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது! நீங்கள் எதை அனுபவித்தாலும் அல்லது இந்த வாழ்க்கையில் எதை எதிர்க கொள்ள வேண்டியிருந்தாலும், இயேசுவும் அதைச் சிலுவையில் எதிர்கொண்டார். இறுதியில், உங்கள் மிகப்பெரிய பொக்கிஷமாகிய உங்கள் ஆவி அவரிடம் பாதுகாப்பாக இருக்கிறது!