• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 ஏப்ரல் 2026

ஷாருக்கான் (SRK) பங்களாவிற்குள் பார்ப்பது எப்படி?

வெளியீட்டு தேதி 16 ஏப்ரல் 2026

பாலிவுட் ரசிகர்கள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்று மும்பையிலுள்ள ஷாருக்கானின் பங்களா ஆகும். அவரை அல்லது அவருடைய காரையாவது ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று மக்கள் தங்கள் கேமராக்களுடன் நாள் முழுவதும் அதன் வெளியே காத்திருக்கிறார்கள்.

அந்த வீட்டைச் சுற்றிலும் மக்கள் ஏறி உள்ளே பார்ப்பதற்கு மரங்கள் இருந்திருந்தால், அவர்கள் நிச்சயம் அதில் ஏறியிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். தாங்கள் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த, செய்திகளில் மட்டுமே கேள்விப்பட்ட, ஆனால் நேரில் சந்திக்காத ஒரு நட்சத்திரத்திற்காக இவ்வளவு சிரமப்படுகிறார்கள்.

இது சகேயுவின் கதையை எனக்கு நினைவூட்டுகிறது; தான் கேள்விப்பட்ட அந்த ரபீயாகிய இயேசு அந்த வழியாகக் கடந்து செல்வதை பார்ப்பதற்காக அவன் ஒரு மரத்தில் ஏறினான்.

ஆச்சரியமாக, இயேசு அந்த இடத்தில் நின்று சகேயுவை அண்ணாந்து பார்த்தார்:

“இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.” லூக்கா 19:5

இயேசு சகேயுவை அண்ணார்ந்து பார்த்து, கீழே இறங்கி தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி சொன்னபோது, அவர் சகேயுவிடம் மறைமுகமாக, "உன் இடம் அந்த மரத்தின் மேல் அல்ல; அது என் இடம்" என்று கூறினார்.

நாம் அவரை ஒருமுறை பார்ப்பதற்காக இனி மரங்களில் ஏற வேண்டிய அவசியமில்லை என்பதற்காகவே, இயேசு ஒரு மரத்தில் (சிலுவையில்) தொங்கினார். அவர் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கினார்:

"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்."ரோமர் 5:8-11

தொலைவில் இருக்கும் ஒரு தெய்வத்தை நோக்கி, ஒரு சிறு அசைவுக்காக நாம் இனி நம்மை வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், சகேயு இயேசுவைத் தன் வீட்டிற்குள் ஏற்றுக்கொண்டது போல, நாம் தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ளவும், தைரியமாய் அவரிடம் சேரவும் இனி நம்மால் முடியும்.

“ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்”. எபிரெயர் 4:16

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.