• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 21 மே 2026

என் தவறுகளின் பட்டியல் 📜

வெளியீட்டு தேதி 21 மே 2026

எங்கள் திருமண வாழ்க்கையில் நான் செய்த தவறுகளைப் பற்றி கேம்ரன் நினைத்திருந்தால் ஒரு புத்தகமே எழுதியிருக்கலாம். ஒரு வாழ்க்கைத் துணையாக நான் தோற்றுப்போன ஒவ்வொரு தருணத்தையும் அவர் மிக அருகிலிருந்து பார்த்திருக்கிறார். நான் பொறுமையை இழந்தபோது, எனது வார்த்தைகள் தவறாக இருந்தபோது, காரணமே இல்லாமல் நான் கோபப்பட்டபோது என எல்லாவற்றிற்கும் அவர் ஒரு சாட்சியாக இருந்திருக்கிறார்.

நான் அவரை ஏமாற்றமடைய செய்த தருணங்களை எல்லாம் மனதில் வைத்து கணக்கு பார்க்காமல் இருக்கிற அளவிற்கு, கேம்ரன் மனதாவில் முதிர்ச்சியுடன் இருக்கிறதை பார்த்து நான் மிகவும் சந்தோஷப்படுறேன். அதுதான் உண்மையான அன்பு:

"அன்பு… தீங்கு நினையாது."1 கொரிந்தியர் 13:5

உண்மையான அன்பு கணக்கு பார்க்காது. அது பிறர் செய்த குற்றங்களை சேமித்து வைப்பதில்லை அல்லது கடந்த கால வலியின் நினைவுகளைப் பாதுகாப்பதில்லை. அதற்கு பதிலாக, அன்பு மன்னிப்பையே தேர்ந்தெடுக்கிறது. மன்னிப்பு என்பது அன்பின் மிகவும் கடினமான மற்றும் பரிசுத்தமான ஒரு செயல்பாடாகும்.

நாம் கசப்பான உணர்வுகளை பிடித்துக் கொண்டிருக்கும்போது, நம்மை நாமே கடந்த காலத்தினுடைய சங்கிலியால் பிணைத்துக் கொள்கிறோம். ஆனால் மன்னிப்பு என்பது விடுதலைக்கான கதவைத் திறக்கிறது—மன்னிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல, மன்னிப்பவருக்கும் கூட. மன்னிப்பது என்பது நடந்தது சரி என்று அர்த்தமல்ல. அதன் தீர்ப்பை நமது கைகளில் வைத்திருக்காமல், தேவனுடைய கைகளில் ஒப்படைத்துவிட்டோம் என்பதே அதன் அர்த்தம்.

இயேசு சிலுவையிலிருந்து, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று சொன்னபோது இதை மிகச்சரியாக வெளிப்படுத்தினார்.

எனக்கு அன்பான சகோதர/சகோதரியே, இதுதான் கசப்பற்ற, இரக்கம் நிறைந்த மற்றும் நித்தியமான அன்பில் நிலைத்திருக்கும் உண்மையான அன்பு.

எனவே, இந்த தருணத்தில், உங்கள் இருதயத்தின் ஆழத்தில் இன்னும் வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நபரையோ அல்லது ஒரு காயத்தையோ நினைத்துப் பாருங்கள். அன்பான அந்தச் செயலை செய்யவும், மன்னிக்கவும் தேவையான தைரியத்தை ஆண்டவரிடம் கேளுங்கள்—அது "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்று மென்மையாக உச்சரிக்கும் ஒரு எளிய ஜெபமாக இருந்தாலும் சரி.

பரலோக பிதாவே, நீர் என்னை அளவற்ற முறை மன்னித்திருக்கிறீர், எனவே நீர் என்னை மன்னித்தது போலவே நானும் பிறரை மன்னிக்க எனக்குக் கற்றுத்தாரும். நான் பிடித்துக் கொண்டிருக்கும் தவறுகளை விட்டுவிடவும், உமது அன்பின் சுதந்திரத்தில் நடக்கவும் எனக்கு உதவி செய்யும். இன்று கசப்பான உணர்வுகள் அல்ல, உமது அன்பே என் நினைவுகளையும் என் இருதயத்தையும் வடிவமைக்கட்டும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.