• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 22 மே 2026

உண்மையைப் பேசுங்கள்… கனிவுடன்!

வெளியீட்டு தேதி 22 மே 2026

எங்களின் 10 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் என் கணவரும் நானும் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நாம் உண்மையைத்தான் பேச வேண்டும்—ஆனால் அது எப்போதும் அன்புடன்தான் இருக்க வேண்டும்.

நாம் கோபத்தில் உண்மையைச் சொல்லும்போது, அது நன்மையை விட தீமையையே அதிகம் செய்கிறது.

"அன்பு…. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்."1 கொரிந்தியர் 13:6

அன்பும் உண்மையும் பிரிக்க முடியாத தோழர்கள்.

உண்மையான அன்பு பாவத்தை மறைக்காது, மற்றவர்களை பற்றிப் புறணி பேசாது அல்லது தோல்விகளைக் கொண்டாடாது. மாறாக, அன்பு நேர்மையையும், நீதியையும், முழுமையையும் தேடுகிறது. சத்தியத்தில் சந்தோஷப்படும் அன்பு ஒரு போது மற்றவர்களைத் தவறாகக் கையாளாது—அது தைரியத்தோடும் இரக்கத்தோடும் இருளுக்குள் ஒளியைப் பாய்ச்சுகிறது.

இயேசு இந்தச் சமநிலையை மிகச்சரியாக வெளிப்படுத்தினார். வேதாகமம் சொல்வது போல, அவர் "கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்" இருந்தார் (யோவான் 1:14). அவருடைய அன்பு ஒருபோதும் பாவத்தைச் சாக்குப்போக்கு சொல்லித் தப்பிக்கவிடவில்லை, ஆனால் பாவிகளுக்கு எப்போதும் கிருபையை நீட்டியது.

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணின் கதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று; அங்கே கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்திருப்பது என்றால் என்ன என்பதை இயேசு நிரூபிக்கிறார். "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை" என்று அவர் கூறுகிறார்—அதுதான் கிருபை. ஆனால் அதே சமயம், "நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே" என்றும் கூறுகிறார்—அதுதான் சத்தியம் (உண்மை). (யோவான் 8:11).

நாம் உண்மையுள்ளவர்களாய் அன்பு காட்டும்போது, இதே போன்ற பரிசுத்தமான பிணைப்பை வெளிப்படுத்துகிறோம். இது மென்மையானதை இருந்தபோதிலும் நேர்மையானது; இரக்கமுள்ளதாய் இருக்கும்போதிலும் தெளிவானது.

எனவே, உங்களிடம் இன்று நான் கேட்கும் கேள்வி இதுதான்: நீங்கள் சமாதானத்தை மதிப்பிடுவதைப்போலவே போலவே உண்மையையும் மதிப்பிடுகிறீர்களா? மற்றவர்களை மேம்படுத்தும் வகையிலும், உங்கள் உறவில் அதிக நேர்மையையும் கிருபையையும் கொண்டு வரும் வகையிலும் அன்பு காட்ட உங்களுக்கு தைரியம் தேவைப்படுகிறதா?

நாம் ஜெபிப்போம்:

பரலோகப் பிதாவே, நேர்மையோடும் கனிவோடும் அன்பு காட்ட எனக்கு உதவி செய்யும். புறணி பேசுவதிலிருந்தும், பாசாங்கு செய்வதிலிருந்தும், பயத்திலிருந்தும் என்னைக் காத்தருளும். இன்று என்னுடைய வார்த்தைகளும் செயல்களும் உம்முடைய உத்தமத்தை பிரதிபலிக்கட்டும். எது சரியோ அதில் சந்தோஷப்படவும், சத்தியம் என்னும் அழகான ஒளியில் நடக்கவும் எனக்குக் கற்றுக்கொடும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.