• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 24 மே 2026

இந்த வாரத்தை மிகச்சிறப்பாக நிறைவு செய்தல்

வெளியீட்டு தேதி 24 மே 2026

இந்த வாரம் முழுவதும் அன்பின் அர்த்தத்தை நாம் ஆராய்ந்தோம். 1 கொரிந்தியர் 13-ஆம் அதிகாரத்தில் பவுல் பட்டியலிட்டுள்ள அன்பின் பண்புகளுள் இறுதியானதை ஆராய்ந்து இந்த வாரத்தை நாம் மிகச் சிறப்பாக நிறைவு செய்யப்போகிறோம்:

"அன்பு ஒருக்காலும் ஒழியாது."1 கொரிந்தியர் 13:8

மற்றவை எல்லாம் ஒழிந்து போகும்—தீர்க்கதரிசனங்கள், அறிவு, ஞானத்தின் வார்த்தைகள், ஏன் இப்போது நாம் புரிந்து வைத்திருக்கும் விசுவாசம் கூட மறைந்து போகலாம். ஆனால் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஏன்? ஏனென்றால் அன்பு என்பது தேவனுடைய சுபாவம். அது நித்தியமானது, மாறாதது மற்றும் ஜெயமானது. மற்றவை அனைத்தும் மறைந்து போகும்போது, அன்பு நிலைத்து நிற்கிறது.

அன்பினால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்— பிறர் காணும்படி செய்யப்படுவதானாலும் சரி, மறைவாக செய்யப்படுவதானாலும் சரி—அது நித்தியம் வரை எதிரொலிக்கும். வார்த்தைகள் மறையும். சாதனைகள் மறக்கப்படும். ஆனால் நீங்கள் காட்டும் அன்பு, மக்களின் இருதயங்களிலும் பரலோகத்திலும் அழியாத முத்திரையை விட்டுச் செல்லும்.

நான் 1 கொரிந்தியர் 13-ஐ வாசிக்கும்போதெல்லாம், ஒரு சிறிய மாற்றத்தை செய்வேன், அது என் இதயத்தில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த அதிகாரத்தில் "அன்பு" என்ற வார்த்தை வரும் இடங்களிலெல்லாம் "தேவன்" என்ற வார்த்தையைப் போட்டு வாசிப்பேன்; ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது (1 யோவான் 4:8). அதாவது, நான் எவ்வித தயக்கமுமின்றி இப்படிச் சொல்ல முடியும்:

தேவன் நீடிய சாந்தமும் தயவுமுள்ளவர். தேவன் இறுமாப்பாயிரார், பொறாமைப்படார், தற்பெருமை பேசார். தேவன் தீங்கினை நினையார் (கணக்கு வைத்துக்கொள்ளமாட்டார்). தேவன் அநீதியில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுவார். தேவன் சகலத்தையும் தாங்குவார், சகலத்தையும் விசுவாசிப்பார், சகலத்தையும் நம்புவார், சகலத்தையும் சகிப்பார். ஏன்? ஏனென்றால் தேவன் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. – 1 கொரிந்தியர் 13:4-8-ன் எனது சொந்த புரிதலின்படி ஒரு சுருக்கம்.

இன்று இந்த அழகான, பரிசுத்தமான தருணத்தில், தேவன் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு ஒருபோதும் ஒழியாது (தோற்காது) என்ற உண்மையை உணர்ந்து இளைப்பாறுங்கள்—அவர் மூலமாக உங்கள் அன்பும் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்க முடியும்.

பரலோகப் பிதாவே, அழியாத உமது அன்பிற்காக நன்றி. அந்த உறுதியான அடித்தளத்தின் மேல் என் வாழ்க்கையைக் கட்ட எனக்குக் கற்றுக்கொடும். என்னுடைய ஒவ்வொரு வார்த்தையும், செயலும், எண்ணமும் உம்முடைய அன்பைப் பிரதிபலிக்கும் ஒரு அன்பிலிருந்து—நிலையான, தைரியமான மற்றும் நித்தியமான அன்பிலிருந்து—புறப்படட்டும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.