• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 12 ஜூன் 2026

அந்த மர்ம மனிதர் யார்?

வெளியீட்டு தேதி 12 ஜூன் 2026

எங்கள் மகன், ஜாக் (Zac), மருத்துவமனையில் இருந்தபோது எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று ஹில்சாங் (Hillsong) குழுவினரின் ‘அனதர் இன் தி ஃபயர்’ (Another in the Fire) என்பதாகும். அந்தப் பாடலின் வரிகள்:

There was another in the fire 

Standing next to me 

There was another in the waters 

Holding back the seas 

And should I ever need reminding 

Of how I’ve been set free 

There is a cross that bears the burden

Where another died for me

(மொழிபெயர்ப்பு : நெருப்பிலே மற்றொருவர் இருந்தார், என் அருகில் நின்றுகொண்டிருந்தார், தண்ணீரிலே மற்றொருவர் இருந்தார், கடல்களைத் தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தார், நான் எவ்வாறு விடுவிக்கப்பட்டேன் என்பதை நினைவூட்ட, எனக்கு எப்போதாவது தேவைப்பட்டால், பாரத்தைச் சுமக்கும் ஒரு சிலுவை அங்கே இருக்கிறது, அங்கே எனக்காக மற்றொருவர் மரித்தார்) 

இந்தப் பாடலுக்கான தூண்டுதல், நேபுகாத்நேச்சார் ராஜாவின் சிலைக்கு முன்னால் பணிந்து குனிய மறுத்ததால் எரியும் அக்கினிச்சூளையிலே தூக்கி எறியப்பட்ட தானியேலின் மூன்று நண்பர்களைப் பற்றி தானியேல் 3-இல் காணப்படும் சரித்திரத்திலிருந்து பெறப்பட்டதாகும்.

அங்கு ஒரு அசாதாரணமான காரியம் நடந்தது: 

“அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.”தானியேல் 3:24-25

அக்கினியில் இருந்த அந்த நான்காவது மனிதன் ஒரு தூதன் என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால் பொருப்பான வேதாகம வல்லுநர்கள் இது கிறிஸ்துநாதரின் தோற்றம் (Christophany) என்றும், அதாவது இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வருவதற்கு முன்பாகவே தோன்றிய ஒரு வெளிப்பாடு என்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.

அவர் ராஜாவுக்கு ஒரு தேவபுத்திரனைப் போல காட்சியளித்தார், ஏனெனில் அவர் தேவகுமாரனாகவே இருந்தார்!

தானியேலின் நண்பர்கள் ஒரு விக்கிரகத்திற்கு முன்பாகப் பணிய மறுத்ததன் மூலம், நம்ப முடியாத அளவிற்கு விசுவாசத்தையும் தைரியத்தையும் காண்பித்தார்கள். இருப்பினும், அவர்கள் அக்கினிச்சூளையிலே தூக்கி எறியப்பட்டார்கள். விசுவாசம் என்பது தீமையான காரியங்கள் நடப்பதில் இருந்து எப்போதும் நம்மைக் காப்பாற்றிவிடுவதில்லை. நம் வாழ்க்கையின் சில சமயங்களில், நம் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு எரியும் அக்கினிச்சூளையில் இருப்பது போல நாம் உணரலாம். ஜெனிக்கும் எனக்கும், எங்கள் 10 மாதக் குழந்தை ஆபத்தான நிலையில் இருந்தபோது அவனுடைய மருத்துவமனை படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த தருணத்தில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைதான் இருந்தது.

ஆனால். அக்கினிச்சூளை எவ்வளவு கொடூரமாக எரிந்தாலும் சரி, அல்லது நம்முடைய வேதனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, கிறிஸ்து அதன் நடுவிலும் நம்மோடு இருக்கிறார் என்பதற்கு இந்தச் சரித்திரம் ஒரு அழகான நினைவூட்டலாகும்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.