இயேசு ஆதாமாக இருந்தாரா, அல்லது ஆதாம் இயேசுவாக இருந்தாரா?
பழைய ஏற்பாட்டில் இயேசுவைக் கண்டறிதல் என்ற நம்முடைய தேடல் இன்று நம்மைக் தொடக்கத்திற்கே அழைத்துச் செல்கிறது: ஆதாம் மற்றும் ஏவாள் வாழ்ந்த காலத்திற்கு.
ஆதாமுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள ஒப்புமைகளையும் முரண்பாடுகளையும் கண்டறிய நாம் மிகவும் ஆழமாகத் தேட வேண்டியதில்லை. உண்மையில், அப்போஸ்தலனாகிய பவுல் அவற்றை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்:
"இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும்… […] கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே." – ரோமர் 5:12,17
"மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." – 1 கொரிந்தியர் 15:21-22
"முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்." – 1 கொரிந்தியர் 15:45,47
ஆனால் ஆதாமின் சரித்திரத்திற்கும் இயேசுவின் சரித்திரத்திற்கும் இடையே மற்றொரு அழகான ஒப்புமை இங்கே இருக்கிறது. ஆதாமும் ஏவாளும் பாவஞ்செய்த பிறகு, பூமி சபிக்கப்பட்டு அது முள்ளையும் குறுக்கையும் முளைப்பிக்கும் என்று தேவன் அவர்களிடம் கூறினார் (ஆதியாகமம் 3:17-18).
இந்த முட்கள் ஏதேனின் மூலமாக உலகிற்குள் பிரவேசித்த பாவத்தின் சாபத்தைக் குறிக்கின்றன.
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய தலையில் ஒரு முள்முடி சூட்டப்பட்டது (மத்தேயு 27:27-30). ஏதேன் தோட்டத்தில் முதன்முதலில் உலகிற்குள் வந்த பாவத்தின் சாபமே அவருக்கு முடியாக சூட்டப்பட்டது. அவர் அதைச் சூடிக்கொண்டது மட்டுமல்லாமல், அதை முறியும் அடித்தார்!
"மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்." – கலாத்தியர் 3:13
நாம் ஒன்றாக இணைந்து ஜெபிப்போம்: கர்த்தராகிய இயேசுவே, பாவத்தின் சாபத்தை ஒரே தரம் மற்றும் எல்லாருக்காகவும் முறியடித்ததற்காக உமக்கு நன்றி. நான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் கூட, சிலுவையில் நீர் எனக்காக செய்து முடித்த எல்லாவற்றையும் நான் பெற்றுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.