• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 21 ஜூன் 2026

நான் சிறந்ததை இறுதிக்காக சேமித்து வைத்துள்ளேன்

வெளியீட்டு தேதி 21 ஜூன் 2026

யோசேப்பின் கதையில் இயேசுவைக் கண்டறிவதற்கான நம்முடைய பயணத்தின் இறுதி நாளுக்கு நாம் வந்திருக்கிறோம். மேலும் இவ்விருவருடைய வாழ்க்கைகளுக்கு இடையிலான சில சிறந்த ஒப்பீடுகளை நான் இறுதி பகுதிக்காக சேமித்து வைத்துள்ளேன்!

யோசேப்பின் சகோதரர்கள் உணவு தேடி எகிப்திற்கு வரும்போது, அவர்கள் தங்களது சகோதரனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை (ஆதியாகமம் 42).

அவர்கள் சிறுவயதாய் இருந்தபோது, யோசேப்பை அடிமையாக விற்று, அவரை மிகக் கொடூரமாக நடத்தியிருந்தபோதிலும், யோசேப்பு அவர்கள் மேல் வஞ்சகம் வைக்கவில்லை. அவர்கள் கேட்டதை விடவும் அதிகமாகக் கொடுத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைக்கிறார்: அவர்கள் வாங்கிய தானியங்களையும், அதற்காக அவர்கள் கொண்டு வந்திருந்த பணத்தையும் சேர்த்துக் கொடுத்துவிடுகிறார். அவர்கள் எதைக் கேட்டிருந்தாலும், யோசேப்பு அதை இலவசமாகக் கொடுத்தார். (ஆதியாகமம் 42).

அவருடைய சகோதரர்கள் இரண்டாம் முறை யோசேப்பை சந்தித்தபோது, அவருடைய உண்மை அடையாளத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். யோசேப்பு அவர்களைக் கட்டியணைத்து மிகவும் சத்தமிட்டு அழுததால், அவர்கள் என்ன செய்வதென்று அறியாது திகைத்தார்கள். அவர்கள் பயந்து, குற்ற உணர்ச்சியால் நிறைந்திருந்தார்கள், ஆனால் நடந்தவை யாவும் தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதியே என்று யோசேப்பு அவர்களுக்கு விளக்குகிறார். அவருக்கு நேரிட்ட அனைத்தும், அவர்களைக் காப்பாற்றக்கூடிய ஒரு நிலைக்கு அவரைக் கொண்டுசென்றிருந்தது. யோசேப்பின் இருதயத்தில் அவருடைய சகோதரர்களுக்கு எதிராகக் கசப்போ, வெறுப்போ அல்லது மன்னிப்பின்மையோ சிறிதும் இருக்கவில்லை (ஆதியாகமம் 45).

இயேசு முதன்முறை இந்த பூமிக்கு வந்தபோது அவர் ராஜாவாக அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் யோசேப்பின் கதையைப் போலவே, அவருடைய இரண்டாம் வருகையும் நெருங்கிவிட்டது, அவர் வரும்போது, முழங்கால் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அவரே கர்த்தர் என்று அறிக்கைசெய்யும்.

அதுவரை, அவர் நம்மிடம் கிருபையுள்ளவராக இருந்து, நாம் பெறுவதற்கு தகுதியற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறார். யோசேப்பு தன் சகோதரர்களிடம் நடந்துகொண்டதைப் போலவே, இயேசுவும் நம்முடைய மீறுதல்களை நமக்கு விரோதமாகக் கணக்கிடாமல், தாராளமாகவும் பரிபூரணமாகவும் நமக்கு மன்னிப்பை வழங்குகிறார்.

நாமும் அதையே செய்யும்படி இயேசு நமக்கு கற்றுக்கொடுக்கிறார்: உங்களுக்கு விரோதமாக பாவம் செய்தவர்களை மன்னியுங்கள், என்று.

“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாட்டு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”கொலோசெயர் 3:13

யோசேப்பு தன் சகோதரர்களின் கொடூரமானச் செயல்களை மன்னிக்க முடிந்ததென்றால், இயேசுவும் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறாரென்றால், உங்களைக் காயப்படுத்தியவர்களை நீங்கள் மன்னிப்பதிலிருந்து உங்களைத் தடுப்பது எது?

இன்று நீங்கள் யாரை மன்னிக்க வேண்டும்?

மற்றவர்களை மன்னிப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால், YouVersion Bible App-இல் கேம்ரன் எழுதியுள்ள இந்த அழகான வாசிப்புத் திட்டத்தை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.