• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 22 ஜூன் 2026

இரத்தம் பேசும் என்று உங்களுக்குத் தெரியுமா?🩸💬

வெளியீட்டு தேதி 22 ஜூன் 2026

இரத்தம் பேசும் என்று உங்களுக்குத் தெரியுமா?🩸💬

நான் இதைச் சும்மா கற்பனையாக சொல்லவில்லை. பரிசுத்த வேதாகமத்தில் தேவன் தாமே அவ்வாறு கூறுகிறார்!

முதலாவதாக, ஆதியாகமம் 4-ஆம் அதிகாரத்தில், தேவன் காயீனிடம் கூறுவதை நாம் வாசிப்போம்:

“என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய [ஆபேல்] இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.” ஆதியாகமம் 4:10

மேலும் எபிரெயர் நிருபத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

“... யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்.”எபிரெயர் 12:23-24

அப்படியானால், இந்த இரத்தம் என்ன பேசுகிறது?

காயீன் தன் சகோதரனான ஆபேலைக் கொடூரமாக கொலை செய்தப் பிறகும், தேவன் அவனுடன் ஒரு உரையாடலைத் தொடங்குகிறார். ஒரு கொலைகாரனாக இருந்தபோதிலும், தேவன் அவனை கைவிட்டுவிடவில்லை. அவர் அவனுடன் ஒரு உறவைக் கொண்டிருக்க விரும்புகிறார். ஆனால் காயீன் தன் நிலையில் மாறாமல் இருந்ததால், தேவன் அவனை நேருக்கு நேர் சந்தித்து, அவனுடைய சகோதரனின் இரத்தம் நியாயத்தைக் கேட்கிறது என்று கூறுகிறார்.

மத்தேயு 23-ஆம் அதிகாரத்தில், இயேசு தம்முடைய காலத்தில் இருந்த “காயீன்களாகிய” பரிசேயர்களுடன் இதேபோன்ற ஒரு உரையாடல் செய்ததை நாம் வாசிக்கிறோம். தன் சகோதரனான ஆபேல் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டான் என்பதை காயீனால் ஏற்றுக்கொள்ள முடியாதது போலவே (1 யோவான் 3:12), பரிசேயர்களாலும் தாங்கள் இரட்சிக்கப்படுவதற்கு இயேசு தேவை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இறுதியில், காயீன் ஆபேலைக் கொன்றது போலவே, இயேசுவும் அவருடைய “சகோதரர்களாகிய” பரிசேயர்களால் கொல்லப்பட்டார்.

நிலத்தைப் பண்படுத்திய காயீன், பரிசேயர்களையும் மற்றும் தங்களுடைய சொந்தக் கிரியைகளே தங்களை இரட்சிக்கும் என்று நம்பும் சுயநீதி உள்ள மற்ற விசுவாசிகளையும் பிரதிபலிப்பவனாய் இருக்கிறான்; தன் பலி தேவனுக்குப் போதுமானதாக இருந்திருக்க வேண்டும் என்று காயீன் நம்பியதைப் போலவே அவர்களும் நம்புகிறார்கள்.

ஆபேல், கிறிஸ்துவின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கிறான்; அவன் ஒரு மேய்ப்பன், நீதிமான், தேவனை நம்பியிருந்தவன், மற்றும் மனிதகுலத்தின் அநீதியினால் கொல்லப்பட்டவன்.

ஆனால், நியாயத்திற்காகக் கூக்குரலிட்ட ஆபேலின் இரத்தத்தைப் போலல்லாமல், இயேசுவின் இரத்தம் மன்னிப்பு, விடுதலை மற்றும் ஒப்புரவாகுதல் ஆகியவற்றை குறித்துப் பேசுகிறது (ரோமர் 8:34).

நாம் அனைவரும் ஒரு இரட்சகர் தேவைப்படுகிற “காயீன்களாகவே” இருக்கிறோம். இன்று நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து, உங்களுக்கு அவர் தேவை என்பதை ஒப்புக்கொள்வீர்களா? உங்களை இரட்சிப்பதற்கு அவருக்கு அது மட்டுமே போதுமானது!

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.