• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 26 ஜூன் 2026

ஒரு முப்பரிமாண ஞானஸ்நானம் ✝️ 🕊️ 🌊

வெளியீட்டு தேதி 26 ஜூன் 2026

நேற்று, இஸ்ரவேல் மக்கள் பசியினால் மரித்துப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, அவர்கள் பரலோகத்திலிருந்து மன்னாவைப் பெற்றதைக் குறித்து நாம் பார்த்தோம்.   

இருப்பினும், அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பிறகு, ஒரு உயிராபத்தான சூழ்நிலையில் தங்களை கண்டுகொண்டது அது முதல் முறை அல்ல.

அவர்களுடைய புதிய தலைவரான மோசே, மக்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தி வந்த சில காலத்திற்குள்ளேயே, பார்வோன் தன் மனதை மாற்றிக்கொண்டு, அவர்களை மீண்டும் பிடித்து வரும்படி தன் படைகளை அனுப்பினான். இஸ்ரவேலர்கள் பயந்து, தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள். அடுத்து என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே–கடல் அற்புதமாகப் பிளந்தது–ஆனால் அதற்கு முன்பாக, நாம் பெரும்பாலும் கவனிக்க தவருகிற ஒரு காரியத்தை தேவன் செய்தார்:

“அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று”. யாத்திராகமம் 14:19-20

அடுத்த நாள், மோசே மக்களை செங்கடலின் வழியாக வழிநடத்துகிறார், தேவன் அவர்களுக்காக வழியுண்டாக்கும்படி சமுத்திரத்தை அற்புதமாகப் பிளக்கிறார். அது எவ்வளவு ஈர்க்கக்கூடிய, அதே நேரத்தில் அச்சமூட்டும் காட்சியாக இருந்திருக்க வேண்டும்!

இங்கே, மக்கள் தேர்ந்துகொள்ள வேண்டிய ஒன்று இருந்தது: தங்களுடைய புதிய தலைவரை நம்பி, கடலின் வழியாக அவரை பின்பற்றிச் செல்வது, அல்லது மீண்டும் அடிமைத்தனத்திற்குத் திரும்புவது.

இயேசுவே நம்முடைய மோசேயாக இருக்கிறார்; அவரை நம்முடைய தலைவராக்கி, அவர் மேல் நம்முடைய விசுவாசத்தை வைப்பதா, அல்லது பாவத்திற்கு அடிமைகளாக வாழ்வதா என்ற ஒரு விருப்பத்தேர்வு நமக்கும் உள்ளது (ரோமர் 6).

பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதிய நிருபத்தில், யாத்திராகமத்தில் நடந்த நிகழ்வுகளைக் குறித்து மிகவும் சுவாரசியமான ஒரு காரியத்தை எழுதுகிறார்:

“…நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.1 கொரிந்தியர் 10:1-2

மக்கள் மூன்று விதமான ஞானஸ்நானங்களைப் பெற்றார்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார், மேலும் அந்த மூன்று ஞானஸ்நானங்களும் நமக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன:

  1. முதலாவதாக, மக்கள் மோசேக்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள், ஆனால் நாம் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட வேண்டும் (ரோமர் 6:3 மற்றும் கலாத்தியர் 3:27).

  2. இரண்டாவதாக, மேகம்; இது பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் பெறுகின்ற ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது (மத்தேயு 3:11).

  3. இறுதியாகக், கடல்; இது ஜலத்தினால் பெறும் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது, விசுவாசிகள் அனைவரும் இதில் பங்கெடுக்கும்படி அழைக்கப்படுகிறார்கள் (அப்போஸ்தலர் 2:38).

நீங்கள் இதுவரை ஞானஸ்நானம் பெறவில்லை, ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் போதகரிடம் பேசுமாறு நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். நீங்கள் இன்னும் எந்தவொரு சபையிலும் உறுப்பினராக இல்லை அல்லது எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை என்றால், எங்களுக்கு ஒரு செய்தி அனுப்புங்கள், உங்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.