வழக்கம் போல், அவர் மையத்தில் இருக்கிறார்.😉
பழைய ஏற்பாட்டில் இயேசுவைக் கண்டறியும் இந்தப் பயணத்தின் அனுபவம் உங்களுக்கு எப்படி இருக்கிறது? அந்த வரலாறுகளை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள இது உங்களுக்கு உதவியிருக்கிறதா? நூற்றாண்டுகள் முழுவதிலும் இயேசு எவ்வாறு பிரசன்னமாக இருந்தார் மற்றும் அவரைப் பற்றி எப்படி தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டன என்பதைக் கண்டு நீங்கள் வியப்படைந்தீர்களா? நான் அதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்! உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள தயங்க வேண்டாம்.
இன்று, பழைய ஏற்பாட்டில் இயேசு முதன்முறையாக எங்கு பிரதிபலிப்பாகக் காண்பிக்கப்படுகிறார் என்பதைக் குறித்து பார்க்க விரும்புகிறேன். துல்லியமாகச் சொல்லவேண்டுமானால், ஏதேன் தோட்டத்தில்.
“தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.” – ஆதியாகமம் 2:8-9
“இந்தப் பகுதியில் இயேசு எங்கே இருக்கிறார்?” என்று நீங்கள் யோசிக்கலாம். வழக்கம்போலவே, அவர் மையப்பகுதியில் தான் இருக்கிறார்.😉
ஜீவவிருட்சம் இயேசுவைப் பிரதிபலிக்கிறது. ஆரோக்கியம், பரிபூரணம் மற்றும் தேவனுடனான உறவு ஆகியவற்றைக் குறிக்கும் விருட்சம் அதுவாகும். நீங்கள் அதிலிருந்து புசித்தால், என்றென்றுக்கும் உயிரோடிருப்பீர்கள்.
ஆதாமும் ஏவாளும் தோட்டத்தில் விலக்கப்பட்ட விருட்சமாகிய நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து புசித்துப் பாவம் செய்தபோது, அவர்கள் ஜீவவிருட்சத்திற்கான அனுமதியை இழந்தார்கள் (ஆதியாகமம் 3).
ஆனால், இயேசு இந்த பூமிக்கு வந்து, நித்திய ஜீவனைப் பெறுவதற்கு ஏற்றதாக நாம் அவரில் புசித்து, பானம்பண்ண வேண்டும் என்று கூறியபோது, அந்த அனுமதி நமக்கு மீண்டும் வழங்கப்பட்டது (யோவான் 6:53-54). இயேசு ஜீவவிருட்சம் மட்டுமல்ல, அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார் (யோவான் 14:6).
ஜீவ அப்பமாகிய இயேசுவைக் கொண்டு நம்மை போஷிப்பதன் மூலம், மிகவும் சத்துள்ள, ஜீவனளிக்கிற மற்றும் நம்மைத் தாங்குகிற உணவிற்கான அனுமதி நமக்குப் கிடைக்கிறது (யோவான் 6:35).
இன்று நீங்கள் உங்களுடைய “காலை உணவை” உட்கொண்டீர்களா?