• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 29 ஜூன் 2026

இது ஏன் வேதாகமத்தில் இருக்கிறது?

வெளியீட்டு தேதி 29 ஜூன் 2026

வேதாகமம் எண்ணற்ற வியக்கத்தக்க வரலாறுகளால் நிரம்பியுள்ளது, அவற்றில் பல நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஆச்சரியமானவை மற்றும் சில நம்முடைய அன்றாட வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு சற்று கடினமானவை. உதாரணத்திற்கு, சிங்கங்கள் நிறைந்த கெபிக்குள் எறியப்பட்ட யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? 🦁🤔

எனக்குத் தெரியாது! அப்படியிருந்தும், பசியுள்ள சிங்கங்கள் நிறைந்த ஒரு கெபிக்குள் ஒரு இரவை கழிக்க வேண்டும் என்ற தண்டனையைப் பெற்ற தானியேலைப் பற்றிய இந்த வரலாற்றை நாம் வேதாகமத்தில் காண்கிறோம் (தானியேல் 6).

நம்முடைய வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் ஒருபோதும் எதிர்கொள்ளப் போவதில்லை என்றால், இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏன் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு ஒரு காரணம் என்னவென்றால், அற்புதம் நிறைந்ததாகத் தோன்றும் அந்த வரலாறுகள் யாவும் நம்மை இயேசுவை நோக்கியே சுட்டிக்காட்டுகின்றன.

சிங்கக் கெபியில் இருந்த தானியேலின் முந்தைய உதாரணத்திற்கு நாம் மீண்டும் வருவோமானால், அந்த முழு வரலாறும் இயேசுவின் சிலுவை மரணத்தோடு வியக்கத்தக்க ஒப்பீடுகளைக் கொண்டுள்ளது (யோவான் 18 மற்றும் 19-இல் உள்ளபடி).

தானியேல், இயேசு ஆகிய இருவர் மீதும் ராஜாவுக்கு துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தானியேல் ஜெபம் செய்ததன் மூலம் தரியு ராஜாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார், மறுபுறம் இயேசு தன்னை யூதர்களின் ராஜா என்று அறிவித்ததன் மூலம் ரோம சக்கரவர்த்திக்குக் கீழ்ப்படியாமல் போனார் என்று பரிசேயர்கள் அவர்மேல் குற்றம் சாட்டினார்கள்.

தரியு ராஜா தானியேலை தண்டிக்க விரும்பவில்லை, ஆனால் தன் சொந்தக் கட்டளையினால் கட்டுப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். அதேபோல், பொந்தியு பிலாத்து இயேசுவைக் குற்றமற்றவர் என்று நினைத்த போதிலும், தன் நல்ல மனச்சாட்சிக்கு மாறாக, அவருக்கு சிலுவை மரணத் தீர்ப்பை அளித்தான்.

இயேசு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டு ஒரு கல்லினால் மூடப்பட்டார், தானியேல் ஒரு கெபிக்குள் எறியப்பட்டு ஒரு கல்லினால் மூடப்பட்டார்.   சிங்கக் கெபியின் மீதிருந்த கல் புரட்டப்பட்டபோது, தானியேல் அற்புதமாக உயிருடன் இருந்தார்! அவர், வரவிருந்த ஒரு நிச்சயமான மரணத்திலிருந்து மீண்டு வந்தது போல அது இருந்தது.   இயேசு சிலுவையில் மரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, கல் புரட்டப்பட்டபோது அங்குக் கல்லறை ஏற்கனவே காலியாய் இருந்தது… அவர் உயிர்த்தெழுந்தார்!

சிங்கங்களால் தானியேலைத் தொட முடியாதது போலவே, பாவத்திற்கும் மரணத்திற்கும் இயேசுவின் மேல் எந்த அதிகாரமும் இருக்கவில்லை.

“தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.” அப்போஸ்தலர் 2:23-24

அடுத்த முறை நீங்கள் வேதாகமத்தில் ஒரு வரலாற்றை வாசிக்கும்போது, அதை உங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கடினப்பட்டால், அதில் இயேசுவை நீங்கள் எங்கு கண்டுகொள்ள முடியும் என்பதை உங்களுக்கு வெளிப்படுத்துமாறு பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.