• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 6 ஜூலை 2026

மகதலேனா மரியாளின் கதை உங்களுடையதாகவும் இருக்க முடியுமா? ✨

வெளியீட்டு தேதி 6 ஜூலை 2026

உங்களுக்கு முன்மாதிரியான நபர் யாரேனும் உண்டா? அந்த நபருடைய வாழ்க்கை, தேர்வுகள், அல்லது குணம் உங்களை ஊக்கப்படுத்துவதை போன்ற ஒரு நபர்? ‘நானும் அவரைப் போல மாற விரும்புகிறேன்’ என்று உங்களை யோசிக்க வைக்கும் ஒரு நபர்? எனக்கு அப்படி ஒருவர் இருக்கிறார். அவளுடைய பெயர் மகதலேனா மரியாள், தி சோசன் (The Chosen) தொடரில் அவள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது.

எல்லாரும் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கும் ஒருத்தியாக அவள் இல்லாமல் இருக்கலாம். முதல் பார்வையில், அவள் ஒரு சீரான நிலையில் இருந்தப் பெண்ணாகத் தோன்றவில்லை. இயேசு அவளிடமிருந்து ஏழு பிசாசுகளைத் துரத்தினார் என்று சுவிசேஷங்கள் நமக்குச் சொல்கின்றன (லூக்கா 8:2). ஒரு முன்மாதிரியிடம் நீங்கள் எதிர்பார்க்கும் பின்னணி இதுவல்ல, அல்லவா?

இருப்பினும், இதுவே மகதலேனா மரியாளைப் பற்றி என்னைக் கவரும் ஒரு விஷயமாக இருக்கிறது. அவள் ஆழமான ஆவிக்குரிய ஒடுக்கத்திலிருந்து வெறுமனே மீண்டு வரவில்லை; இயேசுவின் மிக நெருக்கமான மற்றும் மிகவும் அர்ப்பணிப்புள்ள சீடர்களில் ஒருவராக உயர்ந்தாள்.

அவளுடைய மீளெழுச்சியும் மன உறுதியும் இந்தியாவில் உள்ளப் பெண்களை எனக்கு நினைவூட்டுகிறது. இங்கு பெண்களின் நிலைமை சிக்கலானதாகவும், மாற்றத்தைத் தழுவியதாகவும் இருக்கிறது. பலர் இன்னும் ஆழமான பாரம்பரிய மற்றும் கட்டமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆனாலும் அதே நேரத்தில், ஒரு சக்திவாய்ந்த மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பெண்களிடையே கல்வி வேகமாக மேம்பட்டு வருகிறது, சட்டப்பூர்வமான உரிமைகள் பலமடைந்து வருகின்றன, பொருளாதாரப் பங்களிப்பு அதிகரித்து வருகிறது, மேலும் தலைமைத்துவம் உருவாகி வருகிறது.

இத்தகைய முன்னேற்றங்களை மகதலேனா மரியாள் நிச்சயம் பாராட்டியிருப்பாள்!

என்னைப் பொறுத்தவரை, மரியாள் என்பவள் கற்றுக்கொள்வதற்கும் ஊக்கம் பெறுவதற்கும் உரிய ஒரு நபர் ஆவாள். அவள் ‘பெரும் பாரத்தைச் சுமந்து ஒடுக்கபட்ட நிலையிலிருந்த ஒரு பெண்’ என்ற நிலைலிருந்து மாறி, இயேசுவின் உயிர்த்தெழுதலை முதன்முதலில் கண்டு, அந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட சீஷியாக மாறினாள். மேலும் தி சோசன் (The Chosen) தொடரில், அவள் வேதவசனங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு வளர்வதையும் நாம் காண்கிறோம்.

நீங்கள் ஒரு ஆண், பெண் என யாராக இருந்தாலும், மரியாளின் பயணம் அனைவரிடமும் பேசக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒருவேளை, என்னைப்போலவே, நீங்களும் மகதலேனா மரியாளிடம் உங்களின் ஒரு பகுதியைக் காணலாம். ஒருவேளை நீங்களும் கடுமையான பாரங்களிலிருந்து மீண்டு வந்து, அதிக முதிர்ச்சியுள்ள, புத்திசாலித்தனமான, மற்றும் மற்றவர்களைக் கவனித்துக்கொள்ளக்கூடிய ஒருவராக வளர்ந்திருக்கலாம்.

இதைப்பற்றி மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், எங்களுடைய குணாதிசய வினாடி வினாவில் (Character Quiz) கலந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன். தி சோசன் (The Chosen) தொடரில் உள்ள எந்தக் கதாபாத்திரத்தோடு நீங்கள் அதிகம் ஒத்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிய ஒரு எளிய வழி.

யாருக்குத் தெரியும். அது மரியாளின் கதாபாத்திரமாகவும் இருக்கலாம். 

*இந்த வினாடி வினா தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது, விரைவில் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட தயாராகிக்கொண்டிருக்கிறோம்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.