தேவனுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது!
எஸ்தரின் புஸ்தகம் எனக்கு மிகவும் பிடித்தமானவைகளில் ஒன்று, அது ஒரு எளிய பெண், அரசியாக மாறி, பின்னர் கதாநாயகியாக மாறியதைப் பற்றியது என்பதால் மட்டுமல்ல, தேவனுக்கு ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்பதற்கான இறுதி ஆதாரம் அது என்பதால் தான்!
ராஜாவுக்கு அடுத்தபடியாக இருந்த மிகவும் பெருமையும் தந்திரமும் உள்ள ஆமானைப் பற்றி நாம் வாசிக்கிறோம். ஆமான் பொது மரியாதையை விரும்பினான். ராஜாவின் அரண்மனை வாசலில் இருந்த அனைவரும் அவனுக்கு முன்பாக குனிந்து வணங்கினார்கள், ஒரு மனிதனைத் தவிர: அவன் எஸ்தரின் உறவினரான மொர்தெகாய். இது ஆமானுக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கியதால், அவன் மொர்தெகாயை மட்டுமல்ல, யூதர்கள் அனைவரையும் கொன்றுபோட ஒரு திட்டத்தைத் தீட்டினான்.
ஆனால், அங்கே ஒரு பெரிய திருப்பம் ஏற்படுகிறது. ராஜா ஆமானிடம் ஆலோசனை கேட்கிறார்:
ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான்: என்னைப்பார்க்கிலும் யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் இருதயத்தில் நினைத்து.
ஆமான் ஆலோசனையாகச் சொல்கிறான்:
ராஜா தரித்துக்கொள்ளுகிற ராஜவஸ்திரத்தையும், ராஜா ஏறும்குதிரையையும் கொண்டுவந்து, அவருடைய சிரசிலே ராஜமுடியைத் தரித்து, அந்த வஸ்திரத்தையும் குதிரையையும் ராஜபிரபுக்களில் பிரதானமான ஒருவனுடைய கையில் ஒப்புவித்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு வஸ்திரந்தரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரத்து வீதியிலே உலாவி வரப்பண்ணி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறச்செய்யவேண்டும் என்றான்.
உடனே ராஜா, “மிக்க மகிழ்ச்சி! இப்போது போய் அதை மொர்தெகாய்க்குச் செய்!” என்கிறார் 😳🤣
ஆமான் எப்படி உணர்ந்திருப்பான் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இந்த முழு உலகத்திலேயே தான் மிகவும் வெறுத்த மனிதனை நகரத்தைச் சுற்றி கூட்டிச் சென்று, “ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும்!” என்று அவனுக்கு முன்பாக அவன் சத்தமிட்டுக் கூற வேண்டியிருந்தது.
இந்தக் கதை நீதிமொழிகள் 16:18 ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்:
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
உங்கள் இருதயத்தில் கசப்பைச் சுமக்காமல் இருக்கவும், எப்போதும் தாழ்மையுடன் இருக்கவும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கட்டும்.