• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 17 ஜூலை 2026

மற்றவர்களுக்குப் குழி வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்

வெளியீட்டு தேதி 17 ஜூலை 2026

நீதிமொழிகள் 26:27ன் அடிப்படையில் “மற்றவர்களுக்குக் குழி வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்" என்கிற ஒரு பழமொழி டச்சு கலாச்சாரத்தில் உண்டு. அதாவது, நீங்கள் மற்ற ஒருவரை வீழ்த்துவதற்கு சதி செய்ய முயற்சித்தால், அது உங்களுடைய சொந்த வீழ்ச்சிக்கே காரணமாக முடிந்துவிடக்கூடும் என்பதே அதற்குப் பொருளாகும்.

எஸ்தரின் புஸ்தகத்தில், ஆமானுக்குச் சரியாக இதுதான் நடந்தது. இந்தக் கதையில், அவன் குழி வெட்டவில்லை, அவனுடைய எதிரியான மொர்தெகாயை தூக்கிலேற்றுவதற்கு ஒரு தூக்குமரதை அவன் செய்துவைத்தான் (எஸ்தர் 7:9).

ஆமான் மொர்தெகாயை இவ்வளவு கடுமையாக வெறுத்து, அவன் சித்திரவதைப்பட்டு சாக வேண்டும் என்று விரும்பியதற்குக் காரணம், மொர்தெகாய் அவனுக்கு முன்பாக வணங்கிப் பணிய மறுத்ததே ஆகும் (எஸ்தர் 3:2-6).

பழைய ஏற்பாட்டில் உள்ள பல நிகழ்வுகள் இயேசுவின் வாழ்க்கையையும் மரணத்தையும் பிரதிபலிப்பாக்கி காண்பிக்கின்றன (கொலோசெயர் 2:17), இந்த வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஒரு யூதனான மொர்தெகாய் தனக்கு முன்பாகப் பணிய வேண்டும் என்று ஆமான் எப்படித் துடித்துக்கொண்டிருந்தானோ, அப்படியே பிசாசானவனும் வனாந்தரத்தில் இயேசுவை சோதிக்கும்போது, அவர் தனக்கு முன்பாகப் பணிந்துகொள்ளும்படிச் செய்ய முயற்சித்தான் (மத்தேயு 4:8-10). மொர்தெகாய் மறுத்தான், இயேசுவும் மறுத்தார்.

மொர்தெகாயை பகிரங்கமாகக் கொலை செய்வதற்காக ஆமான் ஒரு தூக்குமரத்தைச் செய்தான், இயேசுவுக்கோ, அதே நோக்கத்திற்காக அவர்கள் ஒரு மரச் சிலுவையை ஆயத்தம் செய்தார்கள்.

இயேசு சிலுவையில் தொங்கினபோது, சகாயமற்றவராகவும், தோற்கடிக்கப்பட்டவராகவும், தம்முடைய எதிரிகளின் கைகளில் அகப்பட்டவராகவும் காணப்பட்ட அந்த ஒரு கணம், பிசாசின் மிகப்பெரிய வெற்றியைப் போலத் தோன்றியது. அவ்வாறே, மொர்தெகாயின் விதியும் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றியது; திட்டம் தயாராக இருந்தது, அவன் தூக்கிலேற்றப்படுவது நிச்சயம் என்றிருந்தது.

ஆனால், உண்மை அதற்கு முற்றிலும் வேறாக இருந்தது. எதிரிகளின் பொல்லாத திட்டங்கள் அவர்களுக்கே தோல்வியாக முடிந்தது. ஆமான் செய்த தூக்குமரமே அவனுடைய மரண இடமாக மாறியது, இயேசுவின் சிலுவை மரணமோ பிசாசின் முற்றுமுடிவான வீழ்ச்சியாயிற்று.

“துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.”  – கொலோசெயர் 2:15 

தீமைக்கென்று நினைக்கப்பட்ட திட்டங்களை நன்மையாக மாற்ற தேவனால் மாத்திரமே கூடும் (ஆதியாகமம் 50:20). 

இயேசு சிலுவையில் செய்த அந்த உன்னதமான தியாகத்திற்காக, மரணத்தின் மேல் நமக்கு என்றென்றைக்குமாக ஜெயம் தந்ததற்காக, இன்று ஒரு நிமிடம் அவருக்கு நன்றி செலுத்துங்கள்!

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.