விசுவாசமும் சந்தேகமும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா?
நீங்கள் எப்போதாவது ஒரு புயலில் சிக்கிக்கொண்டது போல் உணர்வதுண்டா? வாழ்க்கை உங்கள் மீது வீசும் எல்லா அலைகளையும் சமாளித்து முன்னேற முயல்கிறீர்களா? புயல்கள், உண்மையானதாக இருந்தாலும் சரி அல்லது உவமையானதாக இருந்தாலும் சரி, நம்மை பயத்துடனும், நிச்சயமற்ற தன்மையுடனும் மற்றும் பாதுகாப்பற்ற நிலையுடனும் விட்டுவிடக்கூடும்.
ஆனால் ஒரு நற்செய்தி இருக்கிறது; புயலில் நீங்கள் ஒருபோதும் தனியாக இருப்பதில்லை!
ஒரு புயலின் போது சீஷர்கள் தண்ணீரில் ஒரு படகிற்குள் சிக்கிக்கொண்டிருந்தபோது, அவர்கள் திடீரென்று இயேசு தங்களை நோக்கி நடந்து வருவதைக் கண்டார்கள் (மத்தேயு 14:24-25). இயேசு அவர்களோடு பேசி: “திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்” (வசனம் 27).
எப்போதும் தைரியமும் அவசரமும் உள்ள பேதுரு மறுமொழியாக: “ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்”. (வசனம் 28).
இயேசு அவனை அழைத்தார்.
பேதுரு படகை விட்டு இறங்கி, ஒரு கணம், சாத்தியமில்லாத ஒன்றைச் செய்தான்: அவன் இயேசுவை நோக்கித் தண்ணீரின் மேல் நடந்தான்! அவனுடைய உற்சாகத்தையும் பயத்தையும், வேறு யாரும் துணியாத ஒன்றைச் செய்ததன் சிலிர்ப்பையும் கற்பனை செய்து பாருங்கள்.
ஆனால் விரைவில், பேதுரு காற்றையும் அலைகளையும் கவனித்தான். பயம் உள்ளே நுழைந்தது, அவன் மூழ்கத் தொடங்கினான்.
“காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்” – மத்தேயு 14:30
இந்தத் தருணம் ஒரு சக்திவாய்ந்த உண்மையை வெளிப்படுத்துகிறது: அற்புதங்கள் பெரும்பாலும் விசுவாசத்திற்கும் பயத்திற்கும் இடையிலான பதற்றத்தில் தான் நிகழ்கின்றன. நீங்கள் தைரியமாக முன்னோக்கி அடி எடுத்து வைக்கலாம், ஆனால் பயம் சாத்தியமானதை உங்கள் பார்வையிலிருந்து மறைத்துவிடக்கூடும்.
இயேசு கையை நீட்டிப் பேதுருவைப் பிடித்துக்கொண்டார்:
உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். – மத்தேயு 14:31
இயேசு அமைதியாகவும், உறுதியாகவும், சூழ்நிலையை முற்றிலும் தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார். அவர் பேதுருவைக் கடுமையாகக் கடிந்துகொள்ளவில்லை, மாறாக வெறுமனே அவரை நம்பும்படி அவனை அழைத்தார்.
விசுவாசமும் சந்தேகமும் ஒன்றாக இருக்க முடியும். விசுவாசத்தில் முன்னோக்கி அடி எடுத்து வைக்கும் போது கூட பயத்தை உணர்வது இயல்பானது தான். இரட்சிக்க வல்லவரைத் தொடர்ந்து நோக்கியிருப்பதே இதற்குக் முக்கியமாகும்.
இந்த உரை “அசைவாடும் அற்புதங்கள்” என்ற மின்-புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த கதையைப்பற்றி நீங்கள் இன்னும் அதிகமாக சிந்திக்க விரும்பினால், இந்த மின்-புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்யவும். இந்த அற்புதத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு சிறந்த பாடங்களையும், சிந்திப்பதற்கான தூண்டக்கூடிய கேள்விகளையும் இது கொண்டுள்ளது. நான் இதை மிகவும் பரிந்துரைக்கிறேன்!