• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 27 ஜூலை 2026

பெலனுக்காகக் காத்திருத்தல்

வெளியீட்டு தேதி 27 ஜூலை 2026

அனுதினமும் ஒரு அதிசயத்தில் நாம் இதுவரை செய்யாத ஒரு காரியத்தை செய்யப்போகிறோம்.😃

அடுத்த 28 நாட்களுக்கு, நாம் ஒரு முழுமையான வேதப் புத்தகத்தை, ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் வீதம் கடந்து செல்லப்போகிறோம். நீங்கள் ஆயத்தமா?

அது அப்போஸ்தல நடபடிகள் புத்தகம்! 

அப்போஸ்தல நடபடிகளின் முதல் அதிகாரம் ஒரு புதிய தொடக்கத்தைப் போல உணர்வளிக்கிறது.

வசனம் 1-இல், ஆசிரியர் லூக்கா, தனது முந்தைய புத்தகம் ( லூக்கா சுவிசேஷம்) இயேசு செய்யத் தொடங்கினதும் உபதேசிக்கத் தொடங்கினதுமான எல்லாவற்றையும் பற்றியது என்று எழுதுகிறார். மூல உரையில் உள்ள “தொடங்கினார்” என்ற அந்த வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் இயேசு நிறைவேற்றவேண்டிய காரியங்கள் பல இன்னும் பாக்கி இருந்தன.

அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகும், அவருடைய பரமேறுதலுக்குச் சற்று முன்பும் கூட, அவர் தொடர்ந்து பேசவும் உபதேசிக்கவும் செய்தார்.

நாற்பது நாட்களாக, இயேசு தம்முடைய சீஷர்களுடன் தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றிப் பேசினார். ஆனால் சீஷர்கள் அது இன்னும் ஒரு உலகப்பிரகாரமான, அரசியல் ரீதியான ராஜ்யம் என்றே நினைத்துக்கொண்டிருந்தார்கள். “ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?” என்று அவர்கள் கேட்டனர் (வசனம் 6). இயேசு அவர்களின் பார்வையை இன்னும் பெரிதான ஒன்றின் பக்கம் திருப்பினார்.

ராஜ்யம் வரவிருந்தது, ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான முறையில் வரவிருந்தது. மேலும் இயேசு அல்ல, அவர்களே பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் மூலம் அதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கவிருந்தனர்.

அவர்கள் பரிசுத்த ஆவியானவராலே வல்லமையைப் பெற்று, சாட்சிகளாய் இருப்பார்கள் என்று இயேசு அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார் (வசனம் 8). அவ்வாறு செய்யும்போது அவர் எந்த விளக்கத்தையோ அல்லது செயல் திட்டத்தையோ கொடுக்கவில்லை. அவர் அவர்களைக் காத்திருக்கும்படி சொன்னார். சீஷர்கள் எதிர்பார்ப்போடு ஜெபிக்கத் தொடங்கினார்கள்.

நாம் பெரும்பாலும் இதற்கு நேர்மாறாக வாழ்கிறோம். நாம் ஒழுங்குசெய்து திட்டங்களை உருவாக்குகிறோம், பின்னர் அவற்றை ஆசீர்வதிக்கும்படி தேவனிடம் கேட்கிறோம். ஆனால் தேவனுடைய கிரியை, நாம் அவரைச் சார்ந்திருப்பதிலிருந்து தான் தொடங்குகிறது.

சபை உற்சாகத்தினால் பிறக்கவில்லை, கீழ்ப்படிதலினால் பிறந்தது. திறமையினால் அல்ல, ஆவியானவரால் நிரப்பப்படுவதால் பிறந்தது. மனித லட்சியத்தினால் அல்ல, தெய்வீக வல்லமையினால் பிறந்தது.

சாட்சி பகர்வது பேசுவதில் தொடங்குவதில்லை, பெற்றுக் கொள்வதில் தொடங்குகிறது. நாம் முதலில் அமர்ந்திருந்து, அவருடைய ஆவியினால் நிரப்பப்படுவதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்படி இயேசு நம்மை அழைக்கிறார். அந்தச் சார்ந்திருத்தலில் இருந்தே உண்மையான கனி உண்டாகிறது.

இதைச் செய்வதற்கான ஒரு சிறந்த வழி தனிமையையும் மௌனத்தையும் பயிற்சி செய்வதாகும். அதை எப்படி செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தொடங்குவதற்கு உதவ ஒரு மிக நடைமுறையான வேத வாசிப்புத் திட்டத்தை நான் எழுதியுள்ளேன்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.