• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
    • VI Vietnamese
வெளியீட்டு தேதி 13 ஆகஸ்ட் 2026

ஒன்றுசேர்ந்து கட்டுதல்

வெளியீட்டு தேதி 13 ஆகஸ்ட் 2026

கேம்ரனும் நானும் பெரும்பாலும் ஒரே ஒரு இலக்கை மட்டுமே கொண்ட வாலிபர்களைச் சந்திக்கிறோம்: முழுநேர ஊழியத்திற்குள் வருவது. அது தேவனிடமுள்ள அவர்களின் விசுவாசத்திற்கும் அவருடைய ராஜ்யத்தை வளர்ப்பதற்கான அவர்களின் விருப்பத்திற்கும் சான்றாக இருக்கும் ஒரு போற்றத்தக்க ஆசையாக இருந்தாலும், அதை நாங்கள் வழக்கமாக ஊக்குவிப்பதில்லை.

தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கான மிகச்சிறந்த அல்லது ஒரே வழி முழுநேர ஊழியம் மட்டுமே என்று அதிகமான மனிதர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. மிகப்பெரிய அப்போஸ்தலராகிய பவுலுக்குக் கூட ஒரு வேலை இருந்தது. அவர் கூடாரஞ்செயிற்கவராக இருந்தார்.

கொரிந்துவில், பவுல் ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாவையும் சந்திக்கிறார். அவர்கள் ஒரே தொழில் செய்பவர்கள்—கூடாரஞ்செய்பவர்கள்—மற்றும் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.

பவுலின் ஊழியம் அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்படவில்லை. வேலையும் ஊழியமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருந்தது (அப்போஸ்தலர் 18).

ஜெப ஆலயத்தில் எதிர்ப்பு வளர்கிறது, ஆனால் புதிய விசுவாசிகளின் எண்ணிக்கையும் வளர்கிறது. ஜெப ஆலயத் தலைவனாகிய கிறிஸ்பு கூட விசுவாசத்திற்குள் வருகிறான். தேவன் பவுலை ஒரு தரிசனத்தில் திடப்படுத்துகிறார்: “நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கிறேன்” என்றார். (அப்போஸ்தலர் 18:9-10). 

அந்த வாக்குத்தத்தம் மிக முக்கியமானது. தேவனுடைய பிரசன்னமே மனஉறுதிக்கான அடிப்படை.

பின்னர், பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் அப்பொல்லோவுக்குப் போதிப்பதை நாம் காண்கிறோம். அவர் வைராக்கியமாகப் பேசுகிறார், ஆனால் சுவிசேஷத்தை இன்னும் முழுமையாக அறியவில்லை. பகிரங்கமாக அவரைக் கடிந்துகொள்வதிற்குப் பதிலாக, அவரைத் தனியாக அழைத்து தேவனுடைய வழியை அவருக்கு அதிக துல்லியமாக விவரிக்கிறார்கள்.

தேவனுடைய ராஜ்யம் என்பது ஒரு குழுப்பணி என்பதை அப்போஸ்தலர் 18 காட்டுகிறது. அப்போஸ்தலர்கள், தொழிலதிபர்கள், போதகர்கள், புதிய விசுவாசிகள்—ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.

எவரும் திருச்சபையைத் தனியாகக் கட்டுவதில்லை.

முழு அமைப்பிலும் நமக்கான இடத்தை நாம் குறைவாக மதிப்பிடலாம். ஆனால் விசுவாசத்தோடு ஒன்றாக இணைந்து செயல்படுகிற, ஒருவருக்கொருவர் நிறைவாக இருக்கிற, மேலும் ஒருவரையொருவர் கூர்மையாக்குகிற மனிதர்கள் மூலமாக தேவனுடைய கிரியை வளர்கிறது.

உங்கள் வேலை உங்களுக்கு உற்சாகமளிக்கிறதா? அல்லது உங்கள் வேலை அர்த்தமற்றதாகவும், பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகவும் மட்டுமே தோன்றுகிறதா?

அப்படியானால், நீங்கள் இந்த ஜெபத்தைச் செய்யலாம்:

"தேவனே, (சுவிசேஷ) ஊழியம் கண்ணுக்குத் தெரியாததாகவும் சாதாரணமானதாகவும் தோன்றும் போதும், நான் உறுதியாயிருக்கவும் உண்மையுள்ளவனாக/ளாக இருக்கவும் எனக்கு உதவி செய்யும். அன்றாட காரியங்களில் உம்முடைய அழைப்பைக் காண எனக்கு உதவி செய்யும்."

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.