• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
    • VI Vietnamese
வெளியீட்டு தேதி 19 ஆகஸ்ட் 2026

நல்மனசாட்சியோடு

வெளியீட்டு தேதி 19 ஆகஸ்ட் 2026

என் வாழ்க்கையில் நான் பல விதமாக அழைக்கப்பட்டிருக்கிறேன். ரசிகர்கள் என் மீது புகழாரங்களை பொழிந்துள்ளனர், வெறுப்பவர்கள் என்னை தூஷித்துப் பேசியுள்ளனர்.

உங்களுக்கு ஒரு பார்வையாளர் கூட்டம் இருக்கும்போது இதுதான் நடக்கும். ஆனால், நல்ல வேளையாக, என்னை ஒரு மதக் குழுத் தலைவன் என்று யாரும் அழைத்ததில்லை. ஆனால் அப்போஸ்தலர் 24ல் பவுல் மீது அப்படித்தான் குற்றம் சாட்டினார்கள்.

பவுல் மீண்டும் விசாரணைக்கு நிற்கிறார், இந்த முறை தேசாதிபதியாகிய பேலிக்ஸுக்கு முன்பாக. வழக்கறிஞனாகிய தெர்த்துல்லு இச்சகப் பேச்சுகளாலும் கடுமையான குற்றச்சாட்டுகளாலும் விசாரணையை நிரப்புகிறான்: குழப்பவாதி, மதக் குழுத் தலைவன், தொந்தரவு செய்பவன், என்றெல்லாம். பெரிய வார்த்தைகள், சிறிய உண்மை.

பவுல் பேச அனுமதிக்கப்படும்போது, அவர் மிகுந்த பொறுமையுடன் பேசுகிறார். பொய்களை இவ்வாறு மறுக்கிறார்:

“...நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.” (அப்போஸ்தலர் 24:16) 

பவுல் விடுதலையைப் பற்றி மட்டும் கவலைப்படவில்லை, மாறாக உத்தமத்தைப் பற்றியும் கவலைப்படுகிறார். அவரது வாழ்க்கை ஒரு பூரணமான பிம்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை, மாறாக தேவனுக்காக ஒரு உண்மையான இருதயத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதே அவரது முன்னுரிமையாக இருந்தது. நீதியுள்ள நியாயாதிபதிக்குத் தான் இறுதியில் கணக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

பேலிக்ஸும் அவனது மனைவி துருசில்லாளும் கிறிஸ்து இயேசுவின் மீதான விசுவாசத்தைப் பற்றி மேலும் கேட்க விரும்புகிறார்கள். பவுல் நீதியைப் பற்றியும், இச்சையடக்கத்தைப் பற்றியும், வரப்போகிற நியாயத்தீர்ப்பைப் பற்றியும் பேசுகிறார். லேசான வார்த்தைகள் அல்ல, மாறாக எதிர்கொள்ளும் வார்த்தைகள். பேலிக்ஸ் பயமடைகிறான். ஆயினும் அவன் இயேசுவைத் தேர்ந்தெடுப்பதைத் தள்ளிப்போட்டு பவுலிடம்: “இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.” (அப்போஸ்தலர் 24:25)

பேலிக்ஸ் பவுலைத் தவறாமல் வரவழைத்துப் பேசினாலும், பவுல் இரண்டு ஆண்டுகள் சிறையிலேயே இருக்கிறார். ஆர்வம் உள்ளது, ஆனால் அர்ப்பணிக்க மனமில்லை. இரு மனிதர்களுக்கும் இடையே என்னவொரு முரண்பாடு! பவுல் கட்டப்பட்டிருந்தாலும், உள்ளத்திற்குள் விடுதலையுள்ளவராக இருக்கிறார், பேலிக்ஸ் அதிகாரம் படைத்தவனாக இருந்தாலும், உள்ளத்திற்குள் சிறைப்பட்டவனாக இருக்கிறான்.

நீங்கள் யாரோடு அதிகம் உங்களை அடையாளம் கண்டுகொள்கிறீர்கள்?: பவுல் (கட்டப்பட்டவன், ஆனால் உள்ளத்திற்குள் விடுதலையுள்ளவன்) அல்லது பேலிக்ஸ் (விடுதலையானவன், ஆனால் உள்ளத்திற்குள் சிறைப்பட்டவன்)?

நீங்கள் சுதந்திரமாக உணராமல், அதைப் பற்றி யாராவது ஒருவரிடம் பேச விரும்பினால், தயவுசெய்து எங்கள் மின்-பயிற்சியாளர்களில் (e-coaches) ஒருவரைத் தொடர்பு கொள்ளவும். இந்த மின்னஞ்சலுக்குப் பதிலளித்தால் போதும், யாராவது ஒருவர் நிச்சயமாகப் பதிலளிப்பார்கள்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.