புதிய பொருட்களின் மீதுள்ள பிளாஸ்டிக்கை அப்படியே விட்டுவிடுவீர்களா?
நான் முதன்முதலில் இந்தியாவுக்கு வந்தபோது கவனித்த ஒரு காரியம், மனிதர்கள் பொருட்களின் மீதுள்ள பிளாஸ்டிக்கை—குறிப்பாக எலக்ட்ரிகல் பொருட்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல்களில்—எவ்வளவு வாடிக்கையாக அப்படியே விட்டுவிடுகிறார்கள் என்பதுதான்.
அது எனக்கு எப்போதும் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும், ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை, புதிதாக எதையாவது வாங்கும்போது, அதன்மேல் உள்ள பிளாஸ்டிக் மேலுறையை பிரித்தெடுப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.
ஒரு நாள், எனது இந்திய நண்பர் ஒருவரிடம், பொருட்களை ஏன் முடிந்தவரை மூடி வைக்கிறார்கள் என்று கேட்டேன். அவர் புன்னகைத்து, “இது எப்போதும் புதிதாக இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும்” என்றார். 😅
எனவே, புதிய பொருட்களின் மீதுள்ள இந்த அன்பை நீங்களும் பகிர்ந்துகொள்பவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்த வாரம், தேவன் புதிதாக்க விரும்பும் காரியங்களை நாம் பார்க்கப் போகிறோம்.
மேலும் இதில் சிறந்த பகுதி என்னவென்றால், நீங்கள் பிளாஸ்டிக்கை அப்படியே விட்டுவிடத் தேவையில்லை, ஏனென்றால் அவர் அவற்றை நாளுக்கு நாள் புதிதாக்கிக் கொண்டே இருக்கிறார்.
பிரித்துப் பார்க்க நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? 🎁
தேவன் புதிதாக்க விரும்பும் முதல் காரியம் நீங்கள்தான்!
"இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின." – 2 கொரிந்தியர் 5:17
மற்றும்
"அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." – எபேசியர் 4:22-24
வரும் நாட்களில், உங்களுக்குள் தேவன் புதுப்பிக்க விரும்பும் பல்வேறு பகுதிகளைப் பற்றிப் பார்ப்போம், ஆனால் இன்றைக்கு, மேலே உள்ள வசனங்களை மீண்டும் வாசித்து, ‘புதிதாக்கப்படுவது’ என்றால் என்ன என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நீங்கள் புதிதாவதற்கு அதிக முயற்சி செய்ய வேண்டும் என்றோ, அல்லது பல நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் புதுப்பித்தலை சம்பாதிக்க வேண்டும் என்றோ வார்த்தை கூறவில்லை என்பதை கவனியுங்கள்.
இதற்காக நீங்கள் செய்யவேண்டியவை:
- கிறிஸ்துவுக்குள் இருங்கள்
- புதிதாகுங்கள் (உங்கள் சொந்த முயற்சியினால் அல்ல, தேவனால்)
- உங்கள் புதிய சாயலை தரித்துக் கொள்ளுங்கள் (எளிமையாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள்).
அவ்வளவுதான், மிகவும் எளிது. என்னவொரு ஆச்சரியமான பரிசு!