இதைக் கற்பனை செய்து பாருங்கள்…
நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் – தேவன் புதிதாக்க விரும்பும் 7 காரியங்கள் என்ற நமது தொடரின் இறுதி நாளுக்கு வந்துவிட்டோம்.
இதுவரை, தேவன் நம்மையும், நமது இருதயங்களையும், நமது மனதையும், நமது ஆவியையும், நமது கண்களையும், நமது பெயரையும் எவ்வாறு புதுப்பிக்க விரும்புகிறார் என்பதை பார்த்தோம். ஆனால் அவர் அத்துடன் நின்றுவிடுவதில்லை. தேவன் இறுதியில் அனைத்தையும்—முழு பரலோகத்தையும் முழு பூமியையும்—புதிதாக்கும் வரை தொடர்வார்.
யோவான் ஒரு தரிசனத்தில் இதைக் கண்டார்:
“பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.” – வெளிப்படுத்தின விசேஷம் 21:1-2
மேலும் ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, தேவன் அந்த புதிய வானமும் புதிய பூமியும் எப்படி இருக்குமென்று முன்னறிவித்தார்:
“முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்” – ஏசாயா 65:17-18
உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இனி கண்ணீரோ, மரணமோ, துக்கமோ, அலறுதலோ, வருத்தமோ இல்லாத ஒரு இடம் (வெளிப்படுத்தின விசேஷம் 21:4). வீதிகள் பொன்னினாலும் வாசல்கள் முத்துக்களினாலும் செய்யப்பட்ட ஒரு இடம் (வெளிப்படுத்தின விசேஷம் 21:21). பேதுரு அதை நீதி வாசமாயிருக்கும் இடம் என்று விவரிக்கிறார் (2 பேதுரு 3:13).
இந்த பூமியில் நீங்கள் இப்போது எதை சந்தித்துக்கொண்டிருந்தாலும் சரி. அது எவ்வளவு கடினமானதாக, அநீதியானதாக அல்லது வேதனையானதாக இருந்தாலும், நீங்கள் எதிர்நோக்குவதற்கு ஒரு அற்புதமான காரியம் உள்ளது!
அதனால்தான் ஒரு கிறிஸ்தவர் நம்பிக்கையுள்ளவராக இருக்க முடியும். அதனால்தான் நடக்கும் காரியங்களுக்கு மத்தியிலும் ஒரு கிறிஸ்தவரால் புன்னகைக்க முடியும். என்ன நடக்கவிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். – பில்லி கிரகாம்