• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
    • VI Vietnamese
வெளியீட்டு தேதி 3 செப்டெம்பர் 2026

பாடலின் மூலம் துயரத்திலிருந்து வெளியே வாருங்கள்

வெளியீட்டு தேதி 3 செப்டெம்பர் 2026

இந்த வாரம், தாவீது ராஜா தனது வாழ்க்கையின் மிகச் சோர்வான நிலையில் இருந்தபோது, கர்த்தருக்குள் தன்னை எவ்வாறு திடப்படுத்திக்கொண்டார் என்பதை கண்டறியும் ஒரு பயணத்தில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம் (1 சாமுவேல் 30:6).

தேவனைத் துதிப்பதன் முக்கியத்துவத்தை தாவீது புரிந்துகொண்டார் என்பதை நாம் அறிவோம். சங்கீதம் 119:164ல் அவர் கூறுவது: 

“உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.” 

தாவீதின் துதி எப்படி இருந்திருக்கும் என்று நான் யோசிக்கிறேன். அவர் தன் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டே உரத்த குரலில் பாடியிருப்பாரா? உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நடனமாடியதைப் போல? (2 சாமுவேல் 6:14). 

அவர் தன் உள் அறையிலும் நடனமாடியிருப்பாரா? நான் ஒரு ஆராதனைத் தலைவராக இருந்தாலும், தேவனை ஆராதிக்க எனக்கு மிகவும் பிடித்த இடம், ஆச்சரியப்படும் விதமாக ஒரு மேடையோ அல்லது ஒரு ஸ்டுடியோவோ அல்ல. அது கார் தான். தனியாக காரில் செல்லவும், ஒலியை முழுமையாக உயர்த்தவும், எனக்குப் பிடித்த துதிப் பாடல்களைச் சேர்ந்து உரக்கப் பாடவும் நான் விரும்புகிறேன்.

நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது அல்லது "துதிக்கும் மனநிலையில்" இருக்கும்போது மட்டும் இதைச் செய்வதில்லை, நான் மனச்சோர்வடைந்திருக்கும்போதும் அல்லது விரக்தியடையும்போதும் குறிப்பாக இதைச் செய்யக் கற்றுக்கொண்டேன். தொடக்கத்தில், அந்த கணத்தில் என் இருதயம் உணராத வார்த்தைகளை நான் பாடும்போது அது உண்மையானதாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் துதி வளிமண்டலத்தை மாற்றும் என்பதையும், நான் ஒப்புக்கொடுக்கும்போது, என் இருதயமும் ஆவியும் இறுதியில் ஒன்றுபடும் என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.

தாவீது தன் சொந்த ஆத்துமாவிடம் கூறும்போது இந்தக் கருத்தை வெளிப்படுத்துகிறார் :

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. – சங்கீதம் 103:1

இன்றைய முக்கியக் கருத்து: குறைசொல்வதை விட்டுவிட்டு துதிக்கு வாருங்கள்.

ஆராதனை என்பது மனநிலை அல்ல; அது ஒரு ஒழுக்கம் என்பதை தாவீது அறிந்திருந்தார். துதி என்பது ஒரு உணர்ச்சி அல்ல; அது நாம் தேர்ந்துகொள்ளும் ஒன்று. பாடுவது என்பது ஒரு செயல், எதிர்வினை அல்ல. 

தாவீதைப் போல, இன்று தேவனைத் துதிக்கும்படி உங்கள் சொந்த ஆத்துமாவிடம் கூறுங்கள். உங்களுக்கு அப்படித் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும்! உங்களுக்குள் ஏதோ ஒன்று மாறும் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.