• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
    • VI Vietnamese
வெளியீட்டு தேதி 11 செப்டெம்பர் 2026

வரலாற்றிலேயே மிக நீண்ட நிலுவையில் உள்ள பரிசு

வெளியீட்டு தேதி 11 செப்டெம்பர் 2026

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, கேம்ரனும் நானும் ஓர் அற்புதமான பரிசைப் பெற்றோம், அல்லது ஒரு அற்புதமான பரிசின் வாக்குறுதியைப் பெற்றோம். நண்பர்கள் எங்களை அழைத்து, "நீங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறுவதற்காக, முழுமையாகக் கட்டணம் செலுத்தப்பட்ட ஒரு விடுமுறை பயணத்தை உங்களுக்குப் பரிசளிக்க விரும்புகிறோம்" என்று கூறினர். அவர்களின் தாராள மனப்பான்மையைக் கண்டு நாங்கள் வியந்தோம்.🥹

ஆனால் அவர்களின் சலுகையை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, எங்கள் சூழ்நிலைகள் மாறிவிட்டன, எங்களால் அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போனது. ஏழு வருடங்களாக, "சலுகை அப்படியேதான் இருக்கும், நீங்கள் தயராக இருக்கும்போது சொல்லுங்கள்!" என்று அவர்கள் எங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள். அடுத்த மாதம் நாங்கள் இறுதியாக இந்த நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட விடுமுறையை அனுபவிக்கப் போகிறோம்!!😍

இரட்சிப்பும் இதேபோல்தான் செயல்படுகிறது. இது ஒரு விலைக்கு வாங்கக்கூடியது அல்ல, இது ஒரு பரிசு. நீண்ட காலத்திற்கு முன்பே உங்களுக்கு வழங்கப்பட்ட ஒன்று, ஆனால் நீங்கள் அதை இன்னமும் தீவிரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பவுல் கூறியது: 

பாவத்தின் சம்பളം மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6:23

பரிசு என்றால், அது பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். நீங்கள் அதைப் புறக்கணிக்கலாம். அல்லது அதைப் பிரிக்காமல் விடலாம். ஆனால் அது இன்னமும் ஒரு பரிசுதான்.

ஆண்டவர், இயேசுவின் மூலம் நித்திய ஜீவனை வழங்குகிறார். கேள்வி அவர் மனமுள்ளவரா என்பதில்லை. கேள்வி நாம் அதை ஏற்றுக்கொள்வோமா என்பதுதான்.

இன்றைய அதிசயம் என்னவென்றால், பரிசு உங்களுடையது… பெற்றுக்கொள்வதற்காக!

நாம் ஒன்றாக ஜெபிப்போம்:

பரலோகப் பிதாவே, உம்முடைய இரட்சிப்பின் பரிசை நான் பெற்றுக்கொள்கிறேன். இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை செய்கிறேன். அவரை மரித்தோரிலிருந்து நீர் எழுப்பினீர் என்று நம்புகிறேன். நீர் அளிக்கும் நித்திய ஜீவனுக்கு நன்றி. தினமும் அதில் நடக்க எனக்கு உதவும். உம்முடைய ஓய்வின் பரிசையும் நான் பெற்றுக்கொள்கிறேன். இன்று ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, உம்முடைய பிரசன்னத்தின் அமைதியான தண்ணீருக்குள் மெதுவாக நடக்க எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.