நான் ஏன் தனித்துத் தெரியப் படுகிறேன்
பலரும் என் உயரம் எவ்வளவு என்று என்னிடம் அடிக்கடி கேட்பார்கள். குறிப்பாக நான் இந்தியாவில் இருக்கும்போது. உண்மையைச் சொன்னால், நான் கிட்டத்தட்ட ஆறடி உயரமும் வெள்ளை நிறமுமாக இருப்பதால், இந்தியத் தரத்தின்படி ஒரு அரிதான காட்சியாக தனியாக தெரியத்தான் செய்கிறேன்.😅
அந்தக் கேள்வியைக் கேட்பதற்காக மக்களை நான் குறை கூறவில்லை. ஆனால், மறுநாள் அது என்னை யோசிக்க வைத்தது… நம்மை நாமே அளவிட விரும்புகிறோம்.
நமது நல்ல நாட்களை நமது மோசமான நாட்களுடன் ஒப்பிடுகிறோம். நாம் சரியானதைச் செய்த தருணங்களோடு, தவறு செய்த அனைத்துத் தருணங்களையும் ஒப்பிடுகிறோம். நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, எப்போதும் குறைபாடுள்ளவர்களாகவே நம்மைக் காண்கிறோம்.
ஆனால் இரட்சிப்பு என்பது ஒரு அளவுகோலை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
தீத்து 3:5 கூறுகிறது:
“நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.”
இரக்கம் என்றால் நான் பெற வேண்டிய தண்டனை எனக்கு கொடுக்கப்படவில்லை என்று அர்த்தம். கிருபை என்றால் நான் பெறத் தகுதியற்ற நன்மையை நான் பெறுகிறேன் என்று அர்த்தம். இரட்சிப்பில் இரண்டும் வேலை செய்கின்றன.
நற்கிரியைகள் முக்கியம், ஆனால் அவை இரட்சிப்பின் விளைவுதானே தவிர, காரணம் அல்ல. இரட்சிப்பிற்காக நாம் வேலை செய்வதில்லை; நாம் இரட்சிக்கப்பட்டதால் வேலை செய்கிறோம்.
இதை நான் நினைவில் கொள்ளும்போது, இது என் உள்நோக்கத்தை மாற்றுகிறது. தேவனுடைய அன்பைச் சம்பாதிப்பதற்காக நான் ஊழியம் செய்யவில்லை, மாறாக அதை ஏற்கனவே பெற்றுக்கொண்டதால் செய்கிறேன்.
இன்றைய அதிசயம் என்னவென்றால், வாழ்க்கை என்பது நாம் தேவனுக்காக என்ன செய்தோம் என்பதைப் பற்றியது அல்ல, தேவன் நமக்காகச் செய்த அனைத்து நன்மைகளையும் பற்றியது.
நாம் ஒன்றாக ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவே, உமது அன்பை நான் சம்பாதிக்க வேண்டிய அவசியமவில்லை என்பதற்காக உமக்கு நன்றி. என் நற்கிரியைகள் குற்ற உணர்ச்சியிலிருந்து அல்ல, நன்றியுணர்விலிருந்து வெளிப்படட்டும். என் ஒவ்வொரு செயலிலும் நீர் எனக்குக் காட்டிய இரக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் என் இருதயத்தை உருவாக்கும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.