• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
    • VI Vietnamese
வெளியீட்டு தேதி 19 செப்டெம்பர் 2026

அது ஒரு மோசமான திட்டம் போல் தெரிகிறது!

வெளியீட்டு தேதி 19 செப்டெம்பர் 2026

நாகமான் யோர்தான் நதிக்குள் நடந்தபோது என்ன நினைத்துக்கொண்டிருந்தான் என்று நான் யோசித்ததுண்டு.

அந்த நதியின் தண்ணீர் ஈர்க்கக்கூடியதாக இல்லை. உண்மையில், யோர்தான் நதியின் சில பகுதிகள் சேறும் சகதியுமாக விரும்பத்தகாததாக இருக்கும். இந்த செல்வாக்குள்ள தளபதி அநேகமாக துர்நாற்றம் வீசும் ஒரு நதியில், தன்னை வேடிக்கைப் பார்க்கும் மனிதர்களால் சூழப்பட்டு நின்றுகொண்டிருந்திருக்கலாம். மேலும் அவன் ஏழு முறை மூழ்க வேண்டும் என்று தேவன் கூறியிருந்தார்.

அவன் மனதில் ஓடிய எண்ணங்களை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.

"இது என்னை இன்னும் நோயாளி ஆக்கலாம்!",

"இது மிகவும் விசித்திரமான ஒரு செயல்!",

"இது வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது?",

"மக்கள் என்ன நினைப்பார்கள்?".

கீழ்ப்படிதல் என்பதை இவ்வாறு அசௌகரியமாக உணரலாம். தேவனின் கட்டளைகள் எப்போதும் நமது எதிர்பார்ப்புகளுடன் பொருந்துவதில்லை. சில நேரங்களில் அவை நமது பெருமை, நமது நற்பெயர் மற்றும் நமது திட்டங்களுக்கு சவால் விடுக்கின்றன.

ஆனால் நாகமான் இறுதியில் கீழ்ப்படிதலைத் தேர்ந்தெடுத்தான். கீழ்ப்படிதலுக்கு முழு சரணடைதல் தேவைப்படுகிறது. நீதிமொழிகள் என்னும் ஞானப் புத்தகத்தில் வேதாகமம் கூறுவது :

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து” நீதிமொழிகள் 3:5

தேவனைப் பின்பற்றுவது என்பது, விவரங்கள் நமக்கு புரியாவிட்டாலும் அவரை நம்புவதாகும். இதன் அர்த்தம் நமக்கு விருப்பமான தீர்வுகளை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அவருடைய ஞானத்தைத் தழுவுவதாகும்.

நாகமான் தன் கண்ணியத்தையும், தன் பெருமையையும், தன் எதிர்பார்ப்புகளையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் அவனால் சுகம்பெறுதலை அனுபவிக்க முடிந்தது… அவன் அனுபவித்தான்!

நமக்கும் அதுவே உண்மை. சில நேரங்களில் மிகச்சிறந்த அற்புதங்கள் எளிய கீழ்ப்படிதலின் மறுபக்கத்தில் நிகழ்கின்றன. கீழ்ப்படிதலின் கடின உழைப்பு ஆடம்பரமாக வெளியே தெரிவதில்லை, ஆனால் அது எப்போதும் வல்லமையானது.

தேவன் நம்மிடம் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளக் கேட்கவில்லை. பின்பற்றும் அளவுக்கு தன்னை நம்பும்படி மட்டுமே கேட்கிறார்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.