எனது பிரபலமற்றக் கருத்து
பகிர்ந்துகொள்ள என்னிடம் ஒரு பிரபலமற்ற கருத்து உள்ளது. அல்லது, இக்காலத்தில் மக்கள் சொல்வது போல், ஒரு ‘சூடான கருத்து.’
உங்கள் ஆவியைப் பராமரிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உங்கள் சரீரத்தையும் பராமரிப்பது.
எப்படியோ, ஏதோ ஒரு இடத்தில், கிறிஸ்தவர்களாக, நமது சரீரம் ஒரு முதன்மை முன்னுரிமை இல்லை என்றும், நமது ஆவிக்குரிய பயணம் நமது இருதயத்திலும் மனதிலும் நடப்பவற்றுடன் வரம்புக்குட்பட்டது என்றொரு யோசனையை நாம் வளர்த்துக்கொண்டோம்.
நமது சரீரம் எந்தப் பெரிய பிரச்சனையும் ஏற்படுத்தாதவரை, வேதம் வாசிப்பது மற்றும் ஜெபம் போன்ற ஆவிக்குரிய முயற்சிகளுக்கு ஆதரவாக அதை நாம் புறக்கணிக்கலாம் என்று நினைக்கிறோம்.
ஆனால் உண்மை என்னவென்றால், நமது ஆவிக்குரிய பயணம் ஒரு சரீரத்தில் மேற்கொள்ளப்படுகிறது, மேலும் நமது சரீரத்தைப் பராமரிப்பதற்கும் தேவனுடனான நமது உறவை ஆழப்படுத்துவதற்கும் இடையே ஒரு உண்மையான தொடர்பு உள்ளது. – ரூத் ஹேலி பார்ட்டன் (Invitation to Solitude and Silence என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்).
1 இராஜாக்கள் 19ல் எலியாவின் கதையில், தேவன் எலியாவை அறிவுப்பூர்வமாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியாகவோ கையாள நேரத்தை வீணடிக்கவில்லை என்பதை நாம் காண்கிறோம், ஏனெனில் அந்த தருணத்தில் அது எந்த நன்மையும் செய்திருக்காது. எலியாவின் சரீரச் சோர்வைக் கையாள்வதன் மூலம் அவர் தொடங்குகிறார். அவன் தூங்க அனுமதிக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உங்கள் சரீர நிலையைக் சரிபார்க்க HALT கொள்கையைப் பகிர்ந்துகொண்டேன். ஆனால் சில நேரங்களில் நமது சோர்வு ஒரு தற்காலிகப் பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம்; அது ஒரு தூக்கம் சரிசெய்யக்கூடியதைத் தாண்டியதாக இருக்கலாம், நாம் எலும்பு வரை சோர்வடைந்திருக்கலாம். மிக ஆழமான உடல் சோர்வு.
அப்படி நடக்கும்போது, தேவனுடன் நேரத்தைச் செலவழிப்பது, அவர் பிரசன்னத்தில் அமர்வது அல்லது ஆராதிப்பது கூட கடினமாகிறது. ஏனெனில் நமது சரீரம், மனம் மற்றும் ஆவி ஆகியவை மிகவும் இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றில் ஒன்று குறையும் போது, மற்றவைகளும் பாதிக்கப்படுகின்றன.
தேவன் எலியாவைப் பராமரித்தது போலவே, உங்களையும் பராமரிக்கிறார். இயேசு கூறுகிறார் :
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” – மத்தேயு 11:28
நீங்கள் செய்ய வேண்டிய அனைத்திலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தேவனுடைய பிரசன்னத்தில் இருக்க உங்களுக்கு நேரத்தை அனுமதித்தால் எப்படி இருக்கும்?
ஒரு குழந்தை பெற்றோரிடம் சொல்வதைப் போல, நீங்கள் எவ்வளவு சோர்வாக உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி அவரிடம் பேசுங்கள். தேவனிடம் நேர்மையாக இருப்பது, உங்கள் மானிட வாழ்க்கையின் மத்தியில் அவர் உங்களைத் தொட அனுமதிக்கிறது.