• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
    • VI Vietnamese
வெளியீட்டு தேதி 6 நவம்பர் 2026

தேவனுடைய மாற்றுத் திட்டம்

வெளியீட்டு தேதி 6 நவம்பர் 2026

சரிசெய்ய முடியாத அளவிற்கு நீங்கள் உடைந்துவிட்டதாக எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒருபோதும் சரிசெய்யவே முடியாது என்று நீங்கள் நம்பும் அளவிற்கு ஏதேனும் ஒரு காரியத்தை எப்போதாவது செய்திருக்கிறீர்களா? அந்தத் தோல்வி உங்கள் ஆத்துமாவுடன் ஒட்டிக்கொள்ள அனுமதித்திருக்கிறீர்களா?

நான் செய்திருக்கிறேன். என் வாழ்க்கையில் குறைபாடுள்ளவளாக… சேதமடைந்தவளாக… காயப்பட்டு உடைந்துபோனவளாக உணர்ந்த தருணங்கள் இருந்தன. நான் நேர்மையாக இருக்க வேண்டுமென்றால், அவற்றில் சில எனது சொந்தத் தேர்வுகளிலிருந்தே வந்தன.

இந்த வசனம் எனக்கு நினைவுக்கு வருகிறது:

“குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்.” – எரேமியா 18:4

இந்தப் பகுதியில் எனக்குப் பிடித்தது என்னவென்றால்—களிமண் குயவனின் கைகளில் கெட்டுப்போயிற்று, ஆனால் குயவனால் அல்ல. ஆனாலும் கூட… குயவன் அதைக் தூக்கி எறியவில்லை!

தீர்க்கதரிசியான எரேமியா அங்கு நடந்ததைப் பற்றிக் கூறுவதை உன்னிப்பா கவனியுங்கள்: “பாத்திரம்” அழிந்துவிட்டதாகத் தோன்றினாலும், குயவன் அதை மறுபடியும் வடிவமைத்து இன்னும் சிறப்பாக உருவாக்கினார்! இதன் அர்த்தம் என்னவென்றால்—நம்முடைய தோல்விகள் நம்மைத் தகுதியற்றவர்களாக மாற்றுவதில்லை!

தேவன் குறைபாடுகளுக்கு அப்பால் பார்க்கிறார். அவர் திறமையைப் பார்க்கிறார்.

பெரும்பாலும், நாம் நமது தழும்புகள் அல்லது நமது கடந்த காலத்தின் சிதைந்த தருணங்கள் மூலம் நம்மை நாமே வரையறுத்துக் கொள்கிறோம்—ஆனால் தேவன் நம்மை அவருடைய கிருபையால் வரையறுக்கிறார்.

நாம் நம்மை எவ்வாறு பார்க்கிறோம் என்பது முக்கியமானது, ஏனெனில் நம்பிக்கை அனுபவத்தை உருவாக்குகிறது. நாம் சரிசெய்ய முடியாத அளவிற்கு உடைந்துவிட்டோம் என்று நம்பினால், அப்படித்தான் வாழ்வோம்.

ஆனால் தேவன் நம்மைப் புதுப்பிக்கிறார் என்று நாம் நம்பினால், அந்த உண்மையில் நடக்கத் தொடங்குவோம்.

தேவன் நம்மைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை நம்புவதைத் தேர்ந்தெடுப்பதே நமது பணியாகும். நமது கடந்த காலம் சொல்வதல்ல. அவமானம் சொல்வதல்ல. ஆனால் அவர் சொல்வதையே:

"இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்!!!" - ஏசாயா 43:19

இயேசு உங்களுக்கும் இதைச் செய்ய முடியும்!!!

நாம் சேர்ந்து ஜெபிப்போம்: பரலோகப் பிதாவே, நீர் என்னைப் பார்ப்பது போல என்னை நானே பார்க்க எனக்கு உதவும். எனது மதிப்பு குறித்து நான் நம்பியிருக்கும் பொய்களை அகற்றும். என் குறைபாடுகள் என்னை வரையருக்காது என்பதற்காக நன்றி. என் வாழ்க்கையை நீர் தொடர்ந்து உருவாக்குகிறீர் என்பதை எனக்கு நினைவூட்டும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.