கின்ட்சுகி (Kintsugi) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
குயவனும் அவன் கைகளில் உள்ள களிமண்ணும் நமக்குக் கற்பிக்கும் பாடங்களின் 6வது நாளுக்கு உங்களை வரவேற்கிறேன்.
நேற்று தேவனுடைய வார்த்தை நமக்குக் காட்டியதைக் குறித்து நான் இன்னும் உற்சாகமாக இருக்கிறேன். தேவன் உடைந்த பாத்திரங்களைத் தூக்கி எறிவதில்லை—அவர் அவற்றை மறுபடியும் உருவாக்குகிறார்!
இந்த உண்மை என் வாழ்க்கையை மாற்றியுள்ளது, ஏனென்றால் எனக்கு ஒரு இரண்டாம் வாய்ப்பை விட அதிகமாய் தேவைப்பட்டது. எனக்கு மீண்டும் மீண்டும் கிருபை தேவைப்பட்டது. தேவன் ஒருபோதும் தீர்ந்துபோயிற்று என்று சொல்வதில்லை.
இந்த வசனம் என் சொந்த வாழ்க்கையில் ஒரு போர்க்குரலாக மாறியுள்ளது:
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” – 2 கொரிந்தியர் 5:17
“கின்ட்சுகி” (Kintsugi) என்ற ஜப்பானிய கலை தேவனுடைய வேலைப்பாட்டின் அழகான சித்திரமாகும். உடைந்த மட்பாண்டங்களைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக, ஜப்பானிய கைவினைஞர்கள் அவற்றை ஒன்று சேர்த்து, உடைந்த பகுதிகளை தங்கத்தால் இணைக்கிறார்கள்! இது “உடைந்ததை” இன்னும் அதிக மதிப்புமிக்கதாக மாற்றுகிறது!
தேவனுடைய விஷயத்திலும் இதுவே நடக்கிறது! ஏதேனும் கெட்டுப்போனால், குயவன் கைவிடுவதில்லை—அவர் ஒரு சிறந்த நோக்கத்திற்காக அதை மறுபடியும் உருவாக்கி முத்திரையிடுகிறார். பாத்திரம் பழுதுபார்க்க முடியாததாகத் தோன்றும்போது, தேவன் முற்றிலும் புதிய வாய்ப்பைத் தயார்படுத்துகிறார்.
உண்மையில், சில சமயங்களில் அந்தச் செயல்முறையானது புதிய ஒன்றை உருவாக்குவதற்கு முன்பு காரியங்களை உடைப்பதை உள்ளடக்குகிறது. சில நேரங்களில், களிமண் சக்கரத்தின் மீது மேலும் ஒரு முறை வைக்கப்படுவதற்காக தேவனுடைய செம்மைப்படுத்தும் வல்லமையில் “ஊறவைக்கப்பட” வேண்டும்.
அது அசௌகரியமாக இருக்கலாம்!
தேவன் இவற்றை செய்வதற்கு முற்படலாம்:
- பெருமையை நீக்குவது
- கசப்பை உடைப்பது
- ஆசைகளை மறுவடிவமைப்பது
- கடினமான இதயத்தை மென்மையாக்குவது
- முதலிலிருந்து மீண்டும் தொடங்குவது….
ஆனால் அது எப்போதும் சிறந்த ஒன்றுக்காகவே இருக்கும். அவர் நம்மைச் சிறியவர்களாக மாற்றுவதில்லை—அவர் நம்மைப் புதியவர்களாக ஆக்குகிறார்.
கடினமாக இருக்கும்போதும் கூட அந்தச் செயல்முறையை நாம் நம்பினால் போதும். ஏதாவதை கைவிட நேரிட்டாலும் கூட நம்ப வேண்டும். ஏனெனில் அதன் முடிவு மதிப்புள்ளது என்பதை நாம் அறிவோம்.
நீங்கள் இன்று அந்தச் செயல்முறையைத் தழுவிக் கொள்ளலாம். இது ஒரு கடந்துசெல்லும் பயணமாக இருக்கலாம், ஆனால் இது மதிப்புள்ளது!